Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணையே டார்ச் லைட்டாக மாற்றிய.. ரியல் 'டெர்மினேட்டர்'.. தன்னம்பிக்கையால் கேன்சரையே அலறவிட்ட இளைஞர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: புற்றுநோயால் ஒரு கண் பறிபோனபோதும் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத அமெரிக்க இளைஞர் ஒருவர், அந்தக் கண் இருந்த இடத்தில் அசத்தலாக ஒளி கொடுக்கும் டார்ச் லைட்டை பொருத்தி தனது பார்வைக் குறையை தாமாகவே சரி செய்துள்ளார்.

'கேன்சர்' என்று சொன்னாலே பயத்தில் மூர்ச்சையாகி விடும் பெரும்பாலான மனிதர்களுக்கு மத்தியில், துணிச்சலுடன் புற்றுநோயை எதிர்கொள்ளும் அவரது மன உறுதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மன உறுதியும், தைரியமும் இருந்தால் அதை எளதில் வென்றுவிடலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக இந்த இளைஞர் இருப்பதகாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

பயமே வாழ்க்கையாக கொண்ட மனிதர்கள்

பயமே வாழ்க்கையாக கொண்ட மனிதர்கள்

உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். ஒரு வகை மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் சாதாரண பிரச்சினை வந்தாலே கலங்கி போய் விடுவார்கள். என்னவோ அவர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினை வந்ததாக அவர்களாகவே நினைத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கூட சென்றுவிடுவர். என்னவென்று விசாரித்து பார்த்தால், அது மிக சாதாரண பிரச்சினையாகவே இருந்திருக்கும். கொஞ்சம் அமைதியாக இருந்து, அந்த பிரச்சினையை எதிர்கொண்டிருந்தாலே அது முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், மன உறுதி இல்லாததால் அவர்களின் பயமே, இருக்கும் பிரச்சினையை மேலும் பெரிதாக்கிவிடும். இதுபோன்ற மனிதர்கள்தான் உலகில் அதிகம்.

 எதையும் சந்திக்கும் துணிச்சல்காரர்கள்

எதையும் சந்திக்கும் துணிச்சல்காரர்கள்

இரண்டாவது வகை மனிதர்கள், எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் மன உறுதி படைத்தவர்களாக இருப்பர். அது நோயாக இருந்தாலும் சரி; வாழ்வில் ஏதேனும் பிரச்சினையாக இருந்தாலும் சரி. அதைக் கண்டு ஓடி ஒளிய மாட்டார்கள். நேருக்கு நேராக அந்த பிரச்சினையை சந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதற்காக இவர்களிடத்தில் பயமும், பதற்றமும் இருக்காது என்பது அர்த்தம் கிடையாது. மாறாக, அந்த பயத்தின் அளவை விட தன்னம்பிக்கை இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். இதுபோன்ற ஒரு நபரை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

வாழ்க்கையை மாற்றிய கண் புற்றுநோய்

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் பிரையான் ஸ்டான்லி (33). எலட்க்டானிக் இன்ஜினியரான இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்டான்லிக்கு அடிக்கடி இடது கண்ணில் வலி வந்துள்ளது. அவரும் சாதாரண வலிதான் என நினைத்து அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு அவருக்கு கண்ணில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்த போது அவருக்கு கண்ணில் புற்றுநோய் வந்திருப்பது தெரியவந்தது. மருத்துவர்களோ அவரது கண்ணை கட்டாயம் எடுக்க வேண்டும் எனக் கூறிவிட்டனர்.

செயற்கை கண் பொருத்தம்

செயற்கை கண் பொருத்தம்

முதலில், கண்ணில் புற்றுநோய் என ரிப்போர்ட் வந்ததும் அதிர்ந்து போய்விட்டார் ஸ்டான்லி. இனி நம் வாழ்க்கையில் எல்லாமே முடிந்துவிட்டது என எண்ணி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், அந்த வருத்தம் ஒருசில நாட்களே நீடித்தது. கை, கால்கள் இல்லாமலேயே எத்தனை மனிதர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்கின்றனர். ஒரு கண் இல்லாவிட்டால் என்ன.. இன்னொரு கண் தான் இருக்கிறதே என எண்ணி அதை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டார் ஸ்டான்லி. இதன் தொடர்ச்சியாக, அவரது இடது கண் எடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக செயற்கை கண் பொருத்தப்பட்டது. செயற்கை கண் என்பது கண் மாதிரி தான். அதில் பார்வை இருக்காது.

கண்ணில் டார்ச்லைட் - செம ஐடியா

கண்ணில் டார்ச்லைட் - செம ஐடியா

இந்நிலையில், ஒரு கண் இல்லாமலேயே தனது வேலையை வழக்கம் போல பார்க்க தொடங்கினார் ஸ்டான்லி. என்ன இருந்தாலும் இரண்டு கண்கள் இருப்பதை போல இருக்காது அல்லவா? சற்று சிரமப்பட்டே அவர் வேலைகளை செய்து வந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை வந்தது. ஒரு கண்ணில் பார்வைதானே இல்லை. அதற்கு பதிலாக ஒளியை வரவழைத்தால் என்ன என்று நினைத்தாார். அவர்தான் எலட்க்ரானிக் இன்ஜினியர் ஆயிற்றே. தனது செயற்கை கண்ணை எடுத்து, அதில் உள்ள கருவிழியை நீக்கி அதற்கு பதிலாக டார்ச் லைட்டை வைத்தார். என்ன அதிசயம், இரண்டு கண்கள் இருப்பது போல அவர் உணர்ந்தார். பார்வை இல்லாவிட்டாலும் அதில் இருந்து வெளிவரும் ஒளி, மற்றொரு கண்ணுக்கு நல்ல சப்போர்ட்டை கொடுத்தது. இதனால் அவரது வேலைகளும் எளிதாகின. இதனிடையே, தனது டார்ச் லைட் கண் வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் அண்மையில் பதிவிட்டார். அது தற்போது வைரலாக பரவி, ஸ்டான்லியின் நம்பிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+