ரூ.2 கோடி பரிசு.. கனவில் கண்ட நம்பரில் வாங்கிய லாட்டரி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அமெரிக்கர்!
கனவில் வந்த எண்களுக்கு லாட்டரி வாங்கி, ரூ. 2 கோடி பரிசை வென்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர்.
நியூயார்க்: அமெரிக்காவில் கனவில் வந்த எண்களை ஞாபகமாகக் கொண்டு வாங்கிய லாட்டரி சீட்டில் ஒருவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி பரிசு கிடைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பெரும்பாலானோருக்கு இரவில் கண்ட கனவு காலையில் நினைவில் இருக்காது. இரவில் நிஜம் போலவே வாழ்ந்த அந்தக் காட்சியில் காலையில் சுத்தமாக மறந்தே போய் விடும். ஆனால் கனவில் வந்த எண்கள் மூலம் ஒருவர் நிஜத்தில் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார் என்றால், கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான வர்ஜீனியாவில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

லாட்டரி பரிசு
அமெரிக்காவில், அரசு அனுமதியுடன் லாட்டரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்களது வாழ்க்கை மாறி விடாதா, அதிர்ஷ்டம் வாசல் கதவைத் தட்டி விடாதா என்ற ஆசையில், அங்கு லாட்டரிகளை வாங்குபவர்களும் அதிகம், அவர்கள் எதிர்பார்த்தபடியே பரிசு பெற்று வாழ்க்கை மாறியவர்களும் அதிகம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் வர்ஜீனியாவைச் சேர்ந்த அலோன்சோ கோல்மேன் (Alonzo Coleman) என்பவரும்.

பரிசு பணம்
இவர் சமீபத்தில் கார்னர் மார்ட்டில் இருந்து இரண்டு அமெரிக்க டாலர்கள் கொடுத்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், தொலைக்காட்சியில் மூலம் தன்னிடம் உள்ள லாட்டரி சீட்டிற்கு பரிசு விழுந்ததை அவர் தெரிந்து கொண்டார். பரிசுத் தொகையின் மதிப்பு சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,96,89,646.. அதாவது சுமார் 2 கோடி.

கனவில் கண்ட எண்
வெற்றியாளரான கோல்மேன், தனது வெற்றி பரிசுக்கான காசோலையுடன் அலோன்சோ கோல்மேன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வர்ஜீனியா லாட்டரி வெளியிட்டுள்ளது. தனக்கு பரிசை வென்று தந்த அந்த லாட்டரி எண்களை, கடையில் வாங்குவதற்கு முன்னதாக, தன் கனவில் கண்டதாக, லாட்டரி அதிகாரிகளிடம் கோல்மேன் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆச்சர்யம்
இந்தச் செய்தி சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையத்திலும் பிரபலமாகி விட்டார் கோல்மேன். கனவில் கண்ட எண்களை வைத்து வாங்கிய லாட்டரிக்கு இவ்வளவு பரிசா என வியப்புடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கூடவே, கோல்மேனை அதிர்ஷ்டசாலி எனவும் நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications