நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

CODE BLACK.. ஒரு வாரத்தில் உலக போரா? உக்ரைனை அவசரமாக காலி செய்த அமெரிக்கா.. தாக்க ரெடியானது ரஷ்யா

Google Oneindia Tamil News

நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல் சில நாட்களில் முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை முன்னிட்டே அமெரிக்க நாட்டு அரசும் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றி வருகிறது.

Recommended Video

    CODE BLACK!? | Russia VS America | Ukraine-ஐ அவசரமாக காலி செய்த US | Oneindia Tamil

    அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன்!

    பல காலமாக உக்ரைன் பிரச்சனை நிலவி வந்தாலும்.. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில வருடங்களாக காட்டி வரும் ஆர்வம்தான்தான் இந்த மோதலுக்கு காரணம். சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது.

     உச்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்... உச்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்...

    ரஷ்யா விருப்பம்

    ரஷ்யா விருப்பம்

    ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது. இது கூட ரஷ்யாவிற்கு பிரச்சனை இல்லை.. ரஷ்யாவின் பிரச்சனையே உக்ரைன் திடீரென அமெரிக்காவுடனும், ஐரோப்பியா உடனும், நேட்டோ நாடுகள் உடனும் நெருக்கம் காட்டுவதுதான். ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும்.

    நேட்டோ செக்

    நேட்டோ செக்

    இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர கூட்டாளி ஆகும் முன் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன்தான் கவர் செய்கிறது. இதற்காக முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.

    போர் மோதல்

    போர் மோதல்

    இதனால் ஆயுதத்தை கையில் எடுத்த ரஷ்யா உக்ரைனை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.இப்போது மொத்தமாக உக்ரைனை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று வருகிறது. இது போராக வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எப்படி ஆரம்பிக்கும்

    எப்படி ஆரம்பிக்கும்

    இந்த நிலையில்தான் உக்ரைனை ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 1 வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க தொடங்கும். உக்ரைனை ரஷ்யா தாக்கினால் அது போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக 48 மணி நேர கெடுவை அமெரிக்கா தனது குடிமக்களுக்கு கொடுத்துள்ளது.

    வெளியேற்றம்

    வெளியேற்றம்

    அதாவது ரஷ்யா, உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று CODE BLACK எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தினால் முதலில் வான்வெளி தாக்குதல்தான் நடத்தும். அப்படி நடக்கும் பட்சத்தில் விமான போக்குவரத்து நிறுத்தப்படும். அதன்பின் மீட்பு பணி நடக்காது. எனவே உடனே வெளியேறுங்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விட்டுள்ளது. உக்ரைனில் உள்ள தூதரகத்தையும் இன்று காலை ரஷ்யா காலி செய்தது குறிப்பிடத்தக்கது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா கண்டிப்பாக உக்ரைனை அடுத்த ஒரு வாரத்திற்குள் தாக்கும். "எப்போது வேண்டுமானாலும்" இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா உலக நாடுகளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே பிடன் நேட்டோ படை நாடுகளுடன் பல கட்ட ஆலோசனைகளை செய்துவிட்டார். அதோடு நேட்டோ நாட்டு மக்களை உடனே உக்ரைன், ரஷ்யாவை காலி செய்யும்படியும் பிடன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    ரஷ்யா மறுத்தாலும் தீவிரம்

    ரஷ்யா மறுத்தாலும் தீவிரம்

    இதை ரஷ்யா ஒரு பக்கம் மறுத்து வருகிறது. அதாவது நாங்கள் போர் எல்லாம் தொடுக்க போவதில்லை என்று ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் சாட்டிலைட் படங்களின்படி, உக்ரைனை ரஷ்யா ஏற்கனவே சுற்றி வளைத்துள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான படைகளை உக்ரைனை சுற்றி ரஷ்யா குவித்துள்ளது. போர் விமானங்கள், ஏவுகணைகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. க்ரீமியாவில் ரஷ்யா புதிய படைகளை குவித்து உள்ளது. அதோடு உக்ரைனை சுற்றி உள்ள கடல் பகுதியிலும் ரஷ்யா போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன.

    3ம் உலகப்போர்

    3ம் உலகப்போர்

    உக்ரைன் - ரஷ்யா போர் வெடிக்கும் பட்சத்தில் அது ரஷ்யா - அமெரிக்காவின் proxy வார் போல மாறும். இது மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கும். ஒவ்வொரு நாடுகளாக இதில் இணையும் வாய்ப்புகள் உள்ளன. இது வரும் நாட்களில் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும். இதை மனதில் வைத்தே உக்ரைன் மட்டுமின்றி நேட்டோ நாடுகள் அனைத்திற்கும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வருகிறது. நேற்று போலாந்திற்கு அமெரிக்கா தனது 3000 நேட்டோ படைகளை அனுப்பியதற்கு உலக போர் அச்சம்தான் காரணம்.

    இன்று ஆலோசனை

    இன்று ஆலோசனை

    இந்த நிலையில்தான் பிடன் உடன் புடின் இன்று பேச உள்ளார். இது கடைசி கட்ட சமாதான பேச்சுவார்த்தையாக இருக்கும் அல்லது போர் அறிவிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நேட்டோ vs ரஷ்யா என்ற அளவிற்கு இந்த போர் பெரிதாக வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போன் உரையாடலுக்கு பின் முழு முதற் போர் அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கி உள்ள நிலையில் 3ம் உலகப்போர் வெடிக்கும் பட்சத்தில் அது உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒருசேர குலைக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    What is happening between Ukraine - Russia - USA? All you need to know about the Code Black situation?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X