ஒற்றை கையெழுத்தில்.. உலக பொருளாதார அழிவை தூண்டிவிட்ட டிரம்ப்.. எக்ஸ்பர்ட் கணித்த மாதிரியே நடக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிமுகம் செய்த பின்.. இந்த வாரம் மார்க்கெட் மிக மோசமாக தொடங்கி உள்ளது. சீனாவில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக மார்க்கெட் சரிந்து உள்ளது. உலகம் முழுக்க ஒரே கையெழுத்தில் பொருளாதார அழிவை தூண்டிவிட்டுள்ளார் டிரம்ப்.

உலக அளவில் எந்தெந்த மார்கெட்டுகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன என்று இங்கே பார்க்கலாம்.

பங்கு சந்தை சரிவால் ஜப்பான் மார்க்கெட் மூடப்பட்டது

ஜப்பானின் நிக்கேய் 225 9% குறைந்தது

சிங்கப்பூர் பங்குச் சந்தை 5.5% சரிவு

மலேசியா பங்குச் சந்தை 4% சரிவு

ஹாங்காங் பங்குச் சந்தை 8.8% சரிவு

தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான TSMC 10% சரிந்தது

தைவான் பங்கு குறியீடு திறந்த நிலையில் 9.8% சரிந்தது

ஜெர்மனி பங்குச் சந்தை எதிர்காலம் 5% குறைந்தது

ஜப்பானின் TOPIX வங்கிக் குறியீடு 14%க்கு மேல் குறைந்துள்ளது

ஷாங்காய் கச்சா எண்ணெய் 7% குறைந்தது

ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 6.4 சதவீதம் சரிவு

நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸ் 6%க்கு மேல் வீழ்ச்சி

பிட்காயின் $78,000 க்கு கீழ் வருகிறது

Whole world gets into bear market due to Donald Trump decision on Reciprocal Tariff

கிரிப்டோ மார்க்கெட் சரிவு

மொத்த கிரிப்டோ மார்க்கெட் கேப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிப்டோ சந்தைக் குறியீடு, $2.5 டிரில்லியனில் இருந்து $2.38 டிரில்லியனாக 4.8% சரிந்தது.. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வாய் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.

1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 70 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின். இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.

எச்சரித்த மாதிரியே நடக்கிறதே

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி கட்டணங்கள் காரணமாக அமெரிக்கா பெரிய இழப்புகளை சந்திக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.

Take a Poll

அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதான் தற்போது உண்மையில் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+