அந்த கோபம்!.. சிக்கலில் குவாட் அமைப்பு.. இந்தியாவை பார்த்து பிடன் ஏன் திடீரென அப்படி சொன்னார்?
நியூயார்க்: உக்ரைன் ரஷ்ய போரில் இந்தியா நடுக்கத்துடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்து இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பிடன் ஏன் இப்படி தெரிவித்தார், அவர் இந்தியாவை நேரடியாக எதிர்க்கிறாரா என்ற கேள்வியை இவரின் பேச்சு எழுப்பி உள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இரண்டையும் இந்தியா எதிர்க்கவில்லை. இருப்பினும் ரஷ்யாவுடன் இந்தியா கொஞ்சம் நெருக்கம் காட்டி வருகிறது.
அதிலும் பொருளாதார தடைகளுக்கு இடையில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த கச்சா எண்ணெய் அரசியலை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்றாலும், அமெரிக்காவிற்கு இது அதிருப்தியை கொடுத்துள்ளது.

ரஷ்யா
ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் பொருளாதார தடைகளுக்கு எதிரானது கிடையாது. இந்தியா தடையை மீறியதாக கருத முடியாது. இருந்தாலும் வரலாற்றில் இந்தியா தப்பான பக்கங்களில் இருந்துவிட கூடாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த விமர்சனத்தை தொடர்ந்து குவாட் கூட்டமைப்பு உடையுமோ என்ற கேள்வி எழுந்தது. குவாட் என்பது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு ஆகும்.

குவாட்
ஆனால் குவாட் கூட்டமைப்பை சேர்ந்த மற்ற இரண்டு நாடுகள் இந்தியாவை ஆதரித்தன. அதன்படி, இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது இந்தியாவின் தனிப்பட்ட வெளியுறவுக்கொள்கை. இதில் தலையிட முடியாது. இந்தியா இந்த போரில் அமைதியை நிலைநாட்ட முயன்று வருகிறது. இந்தியாவின் அந்த முயற்சியே போதுமானதுதான் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜப்பானும் இந்தியாவை எதிர்க்கவில்லை.

இந்தியா நிலைப்பாடு
இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். அதே சமயம் உக்ரைனுக்கு இந்தியா உதவிகளை செய்ய வேண்டும் என்று ஜப்பான் கூறி உள்ளது. மாறாக இந்தியாவை ஜப்பான் எதிர்க்கவில்லை. இந்தியாவை இரண்டு குவாட் நாடுகள் எதிர்க்காத நிலையில்தான் தற்போது இன்னொரு குவாட் நாடான அமெரிக்கா இந்தியாவை சீண்டி உள்ளது. அதிபர் பிடன் அளித்த பேட்டியில், மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருகிறது.

நேட்டோ
நேட்டோ நாடுகள், ஐரோப்ப நாடுகள், ஆசியாவின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவை எதிர்க்கின்றன. குவாட் நாடுகளும் ரஷ்யாவை எதிர்க்கின்றன. இந்தியா மட்டும் இதில் நடுக்கத்துடன் உள்ளது. மற்றபடி ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. நேட்டோவை பிளவுபடுத்த புடின் நினைத்தார். ஆனால் நேட்டோ இன்னும் நெருக்கமான அமைப்பாக உருவெடுத்துள்ளது என்று பிடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

முதல்முறை இந்தியா
முதல்முறையாக இந்தியாவிற்கு எதிராக இப்படி ஒரு கருத்தை பிடன் தெரிவித்துள்ளார். மேற்கு உலக நாடுகள் தொடர்ந்து எதிர்த்தும் கூட இந்தியா ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதால் பிடன் இப்படி கடுமையான விமர்சனத்தை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உக்ரைன் போரில் அமெரிக்காவின் கோரிக்கைகள் எதையும் இந்தியா கேட்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு, ஐநா பொது சபை வாக்கெடுப்பு எதிலும் அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா கேட்கவில்லை.

பிடன் விமர்சனம்
அதிலும் அமெரிக்காவின் தடைகளுக்கு அஞ்சாமல் இந்தியா ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவை எடுத்து இருக்கிறது. இதன் காரணமாக பிடன் கோபம் அடைந்து இப்படி விமர்சனம் செய்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் இனிமேலும் குவாட் அமைப்பு தொடருமா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. முன்பு போல குவாட் அமைப்பு ஒற்றுமையாக இருப்பது சந்தேகம்தான். ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யு.கே இணைந்து உருவாக்கிய AUKUS கூட்டமைப்பால் குவாட் அமைப்பு மீதான முக்கியத்துவம் குறைந்தது. இந்த நிலையில்தான் குவாட் நாடான இந்தியாவை அமெரிக்க அதிபர் பிடன் விமர்சனம் செய்திருப்பது, இந்த அமைப்பின் இருப்பு மீதான கேள்வியை எழுப்பி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications