செம டேஸ்ட்.. பலா மரத்தில் 2 கால்களை வைத்து.. அப்படியே கெத்தாக பழத்தை பறித்த யானை! வியந்த கோத்தகிரி
நீலகிரி: இப்போது பலாப்பழ சீசன் என்பதால் கோத்தகிரி பகுதியில் அதிகளவில் பலாப் பழங்கள் அதிகளவில் காய்த்து உள்ளன.
Recommended Video - Watch Now
சமீப ஆண்டுகளாகவே மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. காடுகளையும் வன விலங்குகளின் இருப்பிடத்தையும் மனிதர்கள் ஆக்கிரமிப்பதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே கோத்தகிரி பகுதியில் யானை ஒன்று கெத்தாகப் பலா மரத்தில் கால்களை வைத்து பலாப்பழத்தைப் பறிக்கும் காட்சி இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
யானை படம்: வனிதா விஜயகுமாரை குடும்பத்துல சேர்த்துக்குவீங்களா? அருண் விஜய்யிடம் நிருபர் வைத்த கேள்வி

கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சபனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை, தட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை, காபி தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு இடையே ஊடுபயிராகப் பலா மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இவற்றில் இப்போது அதிக அளவு பலாப்பழங்கள் விளைந்துள்ளன.

வீடியோ
இவற்றைச் சாப்பிடுவதற்காகச் சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைக் கூட்டங்கள் பலாமரங்கள் நிறைந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் மாமரம் பகுதியில் இருந்து கோழிக்கரை செல்லும் சாலையில் காட்டு யானை ஒன்று வனப்பாதையில் உள்ள பலா மரத்தில் கால்களை மரத்தின் மீது வைத்து பலாப்பழத்தைப் பறித்தது. இதனை அவ்வழியாகச் சென்ற ஒருவர், தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

அடிக்கடி வரும் யானைகள்
அப்பகுதியில் பலா மரங்கள் அதிக அளவு குடியிருப்பு நிறைந்த பகுதிகளிலேயே உள்ளது. இப்போது பலாப்பழ சீசன் என்பதால் இவற்றை உண்ண யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கும் உலா வருகிறது. பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கூட யானைகள் இப்படி உலா வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெளியே வர வேண்டாம்
யானைகள் நடமாட்டம் காரணமாகப் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். யானைக் கூட்டங்கள் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தால் உடனே வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வனத்துறை நடவடிக்கை
உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும் என்றும் சாலைகளில் உலா வரும் வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்து அவற்றைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.