1800 ரூபாய் ‘அண்டர் டேபிள்’ டீலிங்! பொறி வைத்து பிடித்த போலீஸ்! 60 வயதில் ஜெயிலுக்கு போன ஜெயலட்சுமி!
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெயர் மாற்ற சான்று வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 வருடம், லஞ்சம் கேட்டதுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 60 வயதான இளநிலை உதவியாளர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு தான் புதிதாக வாங்கிய தொழிலாளர் இல்லத்திற்கு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் பெயர் மாற்ற சான்று பெறுவதற்காக கீழ்குந்தா நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளரான ஜெயலட்சுயை அணுகியுள்ளார். அவரை பல முறை ஜெயலட்சுமி அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இளநிலை உதவியாளர்
இதற்கிடையே சான்றிதழை கொடுப்பதற்கு தனக்கு லஞ்சமாக ரூ.1,800/- யை கொடுக்குமாறு இளநிலை உதவியாளரான ஜெயலட்சுமி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சிவக்குமார் நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் இளநிலை உதவியாளர் ஜெயலட்சுமி மீது புகார் மனு அளித்தார்.

லஞ்சம்
இதன் பேரில் நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்கள் பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஜெயலட்சுமியை கைது செய்ய தயாராகினர். கடந்த 2008ஆம் ஆண்டும் அதிகாரிகள் இராசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவக்குமாரிடம் கொடுத்தனுப்பினர். இதையடுத்து பஞ்சாயத்து அலுவலகத்துக் சென்றுள்ளார்.

அதிரடி கைது
பணியில் இருந்த ஜெயலட்சுமியிடம் பணத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயலட்சுமி லஞ்ச பணமான ரூ.1,800/-யை பெற்ற போது கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பணம் பெற்ற ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவும் செய்தனர். இந்த வழக்கானது நீலகிரி மாவட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

7 வருடம் சிறை
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளி ஜெயலட்சுமி மீதான புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், புகார்தாரரிடம் ரூ.1,800/- லஞ்சம் கேட்ட குற்றத்திற்கு 3 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1,000/- அபராதமும், புகார்தாரரிடமிருந்து லஞ்ச பணம் பெற்றதற்கு 4 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2,000/- அபராதமும் விதித்து, இத்தண்டணைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது 60 வயதாகியுள்ள ஜெயலட்சுமியை சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications