பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ட்ரோல் பண்ணவே முடியலையே! மெடிக்கல்களில் இனி இலவச ஆணுறை! அதிரடி அறிவிப்பு.. எங்கே தெரியுமா?

Google Oneindia Tamil News

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டில் 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் 18 வயது முதல் 25 வயது உள்ள ஆண்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த உலகில் பூமியின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக மக்கள் தொகை பெருக்கம் இருக்கிறது. நாட்டு மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய தேவைகளை நிறைவேற்றுவதில் மக்கள் தொகை பெருக்கம் அரசுகளுக்கு பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் பிரான்ஸ் மக்கள் தொகை பெருக்கமும் அந்நாட்டுக்கு சிக்கலை அதிகரித்திருக்கிறது.

அத்துமீறிய தந்தை..மகள் கர்ப்பம்! கொடூரனின் நண்பர்கள் கூடவா? ஷாக் திண்டுக்கல்! தட்டி தூக்கிய போலீஸ்! அத்துமீறிய தந்தை..மகள் கர்ப்பம்! கொடூரனின் நண்பர்கள் கூடவா? ஷாக் திண்டுக்கல்! தட்டி தூக்கிய போலீஸ்!

சிக்கலில் பிரான்ஸ்

சிக்கலில் பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கடந்த சில ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தில் அதிக அளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. திடீரென கடந்த சில ஆண்டுகளில் அந்நாட்டு மக்கள் தொகை உயர்ந்ததன் காரணமாக வளர்ச்சியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆண்டு உயரும் பிறப்பு வீதம், குறையும் இறப்பு விகிதம் மற்றும் பிற நாட்டில் இருந்து வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை காரணமாக பொருளாதார சிக்கல்களை அந்நாடு சந்தித்து வருகிறது.

இம்மானுவேல் மேக்ரான்

இம்மானுவேல் மேக்ரான்

நம்ப முடியாத அளவுக்கு கருத்தரிப்பு விகிதமும் அதிகரித்து வருவதால் தலைநகர் பாரிஸ், மார்ஜுவில், மாரிசெல்லி உள்ளிட்ட நகரங்கள் திணறி வருகிறது. இதனால் பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை அறிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் கருத்தரிப்பு விகிதம் ஒரு புறம் என்றால் பாலியல் நோய்கள் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு மருத்துவரின் பரிந்துரை சீட்டை கொடுத்தால் ஆணுறை சலுகை விலையில் வழங்கப்படும் என அந்த நாடு அறிவித்தது.

இலவச ஆணுறை

இலவச ஆணுறை

அந்தத் திட்டம் ஓரளவு கை கொடுத்த நிலையில் தற்போது மற்றொரு புதிய அதிரடியை அறிவித்திருக்கிறார் அந்நாட்டின் அதிபரான இமானுவேல் மேக்ரான். அதாவது மெடிக்கல் ஷாப்களில் அரசு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் 18 வயது முதல் 25 வயது உட்பட்டோர் ஆணுறையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் அந்த அறிவிப்பு. பிரான்ஸ் நாட்டின் இளைஞர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டும் இளைஞர்களுக்கு விருப்பமே இல்லாமல் சில நேரங்களில் கருத்தரிப்பு விபத்து போல ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மருந்து கடைகளில் ஆணுறை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கருத்தடையில் இது ஒரு சிறிய புரட்சி என்று தனது அரசின் அறிவிப்பை வெகுவாக புகழ்ந்து இருக்கிறார் .

பாலியல் கல்வி

பாலியல் கல்வி

நாட்டில் தற்போது 25 வயதுக்குள் குறைந்த வயதுடைய பெண்கள் கருத்தரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் நாட்டில் உள்ள மருந்து கடைகளில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை வசிக்கும் மக்களிடையே பாலியல் கல்வி ஒழுங்காக சென்று சேரவில்லை புத்தகத்தில் இருப்பது போல இல்லாமல் எதார்த்தத்தில் பாலியல் கல்வியின் நிலைமை மோசமாக இருக்கிறது. இதனால் மேலும் முறையாக பயிற்சி வழங்க வேண்டியிருக்கிறது. வரும் நாட்களில் அது நிச்சயம் சாத்தியப்படும் நம்புகிறேன் என அந்த அறிவிப்பில் இம்மானுவேல் மேக்ரான் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
In order to prevent women under 25 years of age from becoming pregnant in France, French President Emmanuel Macron has announced that he is going to start a program to provide free condoms to men between the ages of 18 and 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X