பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த முதல்வர்.. நிதிஷ் குமார் காலி.. தேஜஸ்விக்கு அமோக ஆதரவு.. தெறிக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு ஆர்ஜேடி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு பீகார் வாக்காளர்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவு இதை தெரிவித்துள்ளது.

Recommended Video

    Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil

    பீகார் சட்டசபைத் தேர்தலின் 3வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு இன்று மாலை முடிவடைந்தது. இதையடுத்து பல்வேறு சானல்கள், ஊடகங்கள் எக்ஸிட் போல் முடிவை வெளியிட்டு வருகின்றன.

    Indiatoday exit poll: Tejaswi Yadav is the most preferred CM of Bihar

    இந்தியா டுடே ஆக்சிஸ் எக்ஸிட் போலில் ஒரு பகுதியாக அடுத்த பீகார் முதல்வர் யார் என்ற கேள்விக்கு வாக்காளர்கள் அளித்திருக்கும் பதில் சுவாரஸ்யமாக உள்ளது.

    தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாருக்கு 35 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. அதேசமயம் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு 3 இடம் கிடைத்துள்ளது. அதாவது 7 சதவீத ஆதரவு அவருக்குக் கிடைத்துள்ளது.

    இன்னொரு தலைவரான உபேந்திர குஷ்வாஹாவுக்கு 4 சதவீத ஆதரவும், பாஜக தலைவரும், துணை முதல்வருமான சுஷில் குமார் மோடிக்கு வெறும் 3 சதவீத ஆதரவும் மட்டுமே கிடைத்துள்ளது.

    பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்

    மக்களிடையே முதல்வர் நிதீஷ் குமாருக்கு செல்வாக்கு சரிந்திருப்பதும், லாலு கட்சிக்கு செலவாக்கு கிடுகிடுவென அதிகரித்திருப்பதும் இந்த எக்ஸிட் போல் முடிவு மூலம் தெரிய வருகிறது. அதேபோல பாஜகவின் செல்வாக்கும் சரிந்துள்ளதும் நிரூபணமாகியுள்ளது.

    இதை விட முக்கியமாக பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு இந்த தேர்தல் மிகப் பெரிய அடியாக அமையும் என்றும் கணிக்க முடிகிறது.

    English summary
    According to the Indiatoday exit poll Tejaswi Yadav is the most preferred CM of Bihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X