இது காலத்தின் தேவை.. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடும் சட்டம் தேவை! பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்!
பாட்னா: இந்திய நாட்டின் மக்கள் தொகை, இதிகாசமான மகாபாரதத்தில் வரும் சுர்சாவின் வாயுடன் விரிவடைந்து கொண்டே செல்வதாக பேசியுள்ளார்.
இன்று உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1987 ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 36வது உலக மக்கள் தொகை தினமாகும். அண்மைக் காலமாக சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், மக்கள் தொகை குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொருளாதார வளர்ச்சியில் சீனாவை விடவும் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. ஆனால், மக்கள்தொகையில் சீனாவையே நாம் மிஞ்சிவிட்டோம். இந்தியாவிடம் குறைந்த வளங்களே உள்ளன. ஆனால் மக்கள் தொகை மகாபாரதத்தில் வரும் சுர்சாவின் வாயைப் போல விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஒரு நபர் 10 குழந்தைகளைப் பெறக்கூடிய வக்கிர மனநிலையை எப்போதும் அனுமதிக்க முடியாது என்று கோபமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் காலத்தின் தேவையாக மாறியுள்ளது. அந்த சட்டம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் கொண்டு வரப்பட வேண்டும். அத்தகைய சட்டத்திற்கான கோரிக்கை நாடாளுமன்றம் முதல் ஒவ்வொரு தெருக்களிலும் எழுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்த கருத்து, பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் கருத்துக்கு முற்றிலும் வேறாக உள்ளது. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தேவை இல்லை என்றும், மாநிலத்தின் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு ஏற்றவாறும் கருவுறும் நிலை குறைந்து வருவதாக நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டில் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு பின்னால், இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதாலேயே இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பதாக வலதுசாரி ஆதரவாளர்கள் பேசினர். இப்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதும், இஸ்லாமியர்களை குழந்தைப் பெற்றுக் கொள்வதை கட்டுப்படுத்தவே என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications