பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. பீகாரில் மருந்தே இல்லாத சிரஞ்சில் எவ்வளவு அழகா..வலிக்காம தடுப்பூசி போடறாங்க இந்த அம்மா

Google Oneindia Tamil News

பாட்னா: நாட்டிலேயே 18-44 வயதுடைய 10 லட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற மத்திய அரசு அறிவித்துள்ள பீகார் மாநிலத்தில் மருந்தே இல்லாத காலி சிரஞ்சை கொண்டு இளைஞர் ஒருவருக்கு வேக்சின் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    பீகாரில் மருந்தே இல்லாத சிரஞ்சில் எவ்வளவு அழகா.. வலிக்காம தடுப்பூசி போடறாங்க இந்த அம்மா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே நாட்டில் திசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திலேயே உள்ளது.

    கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?

    அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த 18 நாட்களாக ஐந்து சதவீதத்திற்குக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் தற்போது பாசிட்டிவ் விகிதம் 2.98%ஆக உள்ளது.

     தடுப்பூசி பணிகள்

    தடுப்பூசி பணிகள்

    இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் வேக்சின் போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் மத்திய அரசின் புதிய வேக்சின் கொள்கை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 18+ அனைவருக்கும் தேவையான வேக்சின்களை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது.

     காலி சிரஞ்ச்

    காலி சிரஞ்ச்

    இதனால் தினசரி தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஒன்றில் மருந்தே இல்லாத காலி சிரஞ்சை கொண்டு இளைஞர் ஒருவருக்கு வேக்சின் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் புதிய சிரஞ்சை திறக்கும் அந்தப் பெண் மருந்தை நிரப்பாமல் நேரடியாக அவருக்கு வேக்சின் போடுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அப்பெண் வேக்சின் போடும் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

     புகார் கொடுத்தோம்

    புகார் கொடுத்தோம்

    இது குறித்து அந்த நபர் கூறுகையில், "நான் வேக்சின் போட்டுக் கொள்வதை எனது நண்பர் தான் வீடியோ எடுத்தார். சில மணி நேரத்திற்குப் பின்னர், அந்த வீடியோவை செக் செய்தபோதே காலி சிரஞ்சில் கொரோனா வேக்சின் இல்லாமல் எனக்குத் தடுப்பூசி போடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்" என்றார்.

     பலருக்கு காலி சிரஞ்ச்

    பலருக்கு காலி சிரஞ்ச்

    இந்த ஒருவருக்கு மட்டும் தவறுதலாக அந்தப் பெண் மருந்தின்றி வேக்சின் அளித்தாரா அல்லது பலருக்கும் இதுபோல காலி சிரஞ்சில் ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் உள்ளட்ட சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.

     முதல் மாநிலம்

    முதல் மாநிலம்

    இந்தியாவில் கடந்த மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அனைத்து மாநிலங்களிலும் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பீகார் மாநிலம்தான் முதல் மாநிலமாக 18-44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A man in Bihar was injected with an "empty" syringe by a nurse at a Covid vaccination centre in the state. Bihar is the first state to vaccinate 10 lakh beneficiaries of the 18-44 years age group.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X