உச்சத்தில் விலைவாசி.. ஆனால் எதிர்க்கட்சிகளை பழிவாங்க தீவிரம்.. பாஜகவுக்கு நாராயணசாமி கண்டனம்!
புதுச்சேரி: விலைவாசி உயர்வு பிரச்னையில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத் துறையை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உட்பட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து கரிகுடோனில் அடைத்தனர்.

நாராயணசாமி பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத் துறை மூலம் விசாரணைக்கு அழைத்து மரியாதையையும் குறைக்க வேண்டும். மக்கள் மத்தியில் அந்தக் கட்சியின் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

பாஜக மீது விமர்சனம்
ஆவணங்கள் அனைத்தும் தரப்பட்டாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, சோனியா காந்தியையே விசாரணைக்கு அழைத்துள்ளோம் என்ற ஒரு விளம்பரம் செய்கிறது. இந்த வழக்கின் முடிவில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று நிரூபிக்கப்படும். பாஜக அரசின் முகத்திரை கிழிக்கப்படும். அராஜகத்தை கடைப்பிடித்து, பண பலம், அதிகார பலத்தை வைத்து மாநில அரசுகளை கவிழ்க்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது.

விலைவாசி உயர்வு
பிரதமர் கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளது. அரிசி, பருப்பு, கோதுமை சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. நாட்டில் 25 கோடிக்கும் அதிகமானோர் வேலைய இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இன்னும் சில காலம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தொடர்பான விவாதம் நடத்த நாடாளுமன்றம் தொடர்ந்து 3 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி, மைதா, பால், தயிர் என மக்கள் தினமும் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய பொருட்களும் ஜிஎஸ்டி வரி போட்டு மக்களை துன்புறுத்தும் பாஜக அரசு தூக்கி எறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications