வெளுத்து வாங்கும் கனமழை.. புதுச்சேரி-காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. வெளியான அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தென்மேற்கு பருவழை முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
கடந்த மாதம் 29ம் தேதி தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் கூட தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை
குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏறக்குறைய சென்னையின் அனைத்து இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. மேலும் பல இடங்களில் கனிசமான அளவு மழை பெய்து இருந்தது.

காரைக்கால்-புதுச்சேரி மழை
இதேபோல் தமிழ்நாட்டின் பிற இடங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்து வருகின்றன. இந்த பகுதிகளில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை கனமழைக்கு வாய்ப்பு
அதன்படி நாளை(நவம்பர் 3) ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 3) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications