புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக உள்ளது.. தமிழிசை சவுந்தராஜன் தாக்கு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: "தமிழகத்தில் எதிர்ப்பு பிரசாரம் அதிகமாக உள்ளது.. சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன... அதை நாம் மீட்டு உருவாக்க வேண்டும்" என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அறைகூவல் விடுத்துள்ளார்!

தேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் சகோதரத்துவத்துக்கான 3 நாள் கருத்தரங்கு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது.

telangana governor Tamilisai Soundararajan speech in puducherry

இதன் தொடக்கவிழா மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கருத்தரங்கை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது: "இந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தகம், கலாசாரம் குறித்து தொடர்புகள் இருந்து வந்திருக்கிறது.. ஆனால் வரலாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை மீட்டு உருவாக்கம் செய்வது அவசியமானது.

Recommended Video

    வைரலான வீடியோ... பள்ளி அறையில் பாடும் சிறுவன் யார் ?

    இந்த தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் அதன் வரலாறு தவறாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், 1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் அருமையும் பெருமையும் நாடெங்கும் பரவியது.. அதனால்தான் இப்போதைய அரசு மகாராஷ்டிர துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டியிருக்கிறது.

    ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பு பிரசாரமே அதிகமாக உள்ளது. சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன. அதை நாம் மீட்டு உருவாக்க வேண்டும். தமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவின் கவர்னராக உள்ளதற்காக பெருமை அடைகிறேன்" என்றார்.

    English summary
    telangana governor Tamilisai Soundararajan speech in puducherry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X