புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதிக விலைக்கு விக்கறாங்க.." புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நோக்கி பாஜகவினர் நடத்திய முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    அதிக விலைக்கு விக்கறாங்க.. புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்

    தமிழ்நாடு முழுக்க மதுபானங்கள் மாநில அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் டாஸ்மாக் மூலமே விற்பனை செய்யப்படுகிறது.

    பாஜக கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கு.. 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு பாஜக கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கு.. 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு

    தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டுத் தரும் துறைகளில் இதுவும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது.

    டாஸ்மாக்

    டாஸ்மாக்

    மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் அனுமதிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் உள்ளன. மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான கடைகளில் அதிக விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் உள்ளன.

     புதுக்கோட்டை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 137 டாஸ்மார்க் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து கடையிலுமே மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் முயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கமிஷனாக கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

     ரூ. 10 அதிகம்

    ரூ. 10 அதிகம்

    மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டில் மதுவுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைக் கண்டித்து, பாஜகவினர் மதுபான கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்றைத் தினம் முற்றுகை போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

     திமுகவினருக்கு கமிஷன்

    திமுகவினருக்கு கமிஷன்

    இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று திமுக கூறியது. ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் குடிமகன்கள் மீது கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் திமுக நிர்வாகிகளுக்குப் பல கோடி ரூபாய் ஒரு நாளைக்குத் தமிழகம் முழுவதும் கமிஷனாக கிடைக்கிறது. உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை டாஸ்மாக் நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றனர்.

     முற்றுகை போராட்டம்

    முற்றுகை போராட்டம்

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் கூடுதல் விற்பனையைத் தடுத்து நிறுத்த கோரியும் புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

    English summary
    BJP in pudukkottai demonstrated protest against TASMAC shops: (டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்) BJP protest against Tamilnadu govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X