மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் ஓமிக்ரான் - ஷீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேர தரிசனம் ரத்து

மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 31 பேருக்கு ஒமைக்ரான் உறுதி ஆனது. இதனால் நாடு முழுவதும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 450ஐ தாண்டியது.

Subscribe to Oneindia Tamil

புனே: மகாராஷ்டிராவில் பல நகரங்களில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஷீரடி சாய்பாபா கோவிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

ஓமிக்ரான் தொற்று நாடு முழுவதும் 450 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் டெல்லி 2வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இமாசல பிரதேசம்

இமாசல பிரதேசம்

இமாசலபிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இது அம்மாநிலத்தின் முதல் ஓமிக்ரான் பாதிப்பாகும். 45 வயதான அந்தப் பெண்ணுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது அவர் ஓமிக்ரான் தொற்றில் இருந்து மீண்டுவிட்டார் என்று மாநில சுகாதாரத் துறை செயலாளர் அமிதாப் அவஸ்தி அறிவித்துள்ளார்.

தீவிரமாக பரவும் ஓமிக்ரான்

தீவிரமாக பரவும் ஓமிக்ரான்

மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 31 பேருக்கு ஓமிக்ரான் உறுதி ஆனது. இதனால் நாடு முழுவதும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 450ஐ தாண்டியது.
மாநிலம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், திருமண விழாக்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இரவு தரிசனம் ரத்து

இரவு தரிசனம் ரத்து

அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாய்பாபா கோவிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

8 பேர் பாதிப்பு

8 பேர் பாதிப்பு

மத்தியபிரதேசத்தின் மாநிலம் இந்தூரில் 8 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானதாக அம்மாநில உள்ளாட்சித் துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா அறிவித்துள்ளார். ஓமிக்ரான் தொற்றுக்கு உள்ளான 8 பேரில் 6 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய மருத்துவக்குழு ஆய்வு

மத்திய மருத்துவக்குழு ஆய்வு

ஓமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மருத்துவ குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+