ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு.. 70 எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றம்.. பரபரப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உள்பட 70 எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் துவங்கி உள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடவில்லை.
சோனியா காந்தியின் முழு ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இதில் அசோக் கெலாட் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

சச்சின் பைலட் புதிய முதல்வர்?
காங்கிரஸ் கட்சியில் தற்போது ஒருநபர் ஒரு பதவி என்ற நடைமுறை உள்ளதால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் ராஜஸ்தானின் முதல்வர் பதவி ராகுலுக்கு மிகவும் நெருக்கமான சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதனை அசோக் கெலாட் விரும்பவில்லை. இருப்பினும் கட்சி மேலிடத்தின் ஆதரவால் எளிதாக சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.

சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு
இந்நிலையில் தான் சச்சின் பைலட்டுக்கு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கொடுக்க அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் விரும்பவில்லை. மாறாக அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சச்சின் பைலட்டுக்கு எதிராக தீர்மானம்
இந்நிலையில் தான் இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏ சாந்தி தரிவால் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 70 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.அப்போது, 2020ல் 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த சமயத்தில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்வு செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்தை அவர்கள் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

2020ல் நடந்தது என்ன?
அதாவது ராஜஸ்தானில் கடந்த 2020ல் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது சச்சின் பைலட் தனது 18 ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இருப்பினும் ராகுல் காந்தியின் ஆலோசனைக்கு பிறகு அவர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு வழங்கினார். இந்நிலையில் தான் தற்போது சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதாவது 2020ல் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக நின்ற 102 எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 56 எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மொத்த எம்எல்ஏக்கள்
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் காங்கிரசுக்கு தாவிய 6 பேரும் அடங்குவர். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 12 பேர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். இதுதவிர பிற கட்சி எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். அதன்படி மொத்தம் 124 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு உள்ளது. பாஜக கட்சிக்கு அங்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு 75 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications