Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவிற்கு பலத்த பாதுகாப்பு - பசும்பொன் செல்வது எப்படி

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 59வது குருபூஜை விழா மற்றும் 114வது ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 59வது குருபூஜை விழா மற்றும் 114வது ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவில் , கலந்துகொள்ள இருப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி வாகன சீட்டு பெற வேண்டும் என்றும், அதை கண்ணாடியின் முன்பு நன்கு தெரியும் இடத்தில் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஆலயத்தில் இன்று காலை பிள்ளையாா் பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 59வது குருபூஜை விழா மற்றும் 114 ஜெயந்தி விழா நேற்று ஆன்மீக விழாவுடன் துவங்கியது.

உக்கிரபாண்டியத்தேவர்- இந்துராணி அம்மாள் ஆகியோரின் மகனாக கடந்த 30.10.1908ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் பிறந்தார். பின்னர் 30.10.1963ம் ஆண்டு பிறந்த தினத்தன்றே முத்துராமலிங்கத்தேவர் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாள் அவரது ஜெயந்தி விழாவாகவும், குருபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தங்கவேல், சத்தியமூர்த்தி, பழனி ஆகியோர் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்தினர்.

தேவர் குருபூஜை அஞ்சலி

தேவர் குருபூஜை அஞ்சலி

அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் குருபூஜை விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடு

பாதுகாப்பு ஏற்பாடு

தேவர் ஜெயந்தி விழாவில் , கலந்துகொள்ள இருப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி வாகன சீட்டு பெற வேண்டும் என்றும், அதை கண்ணாடியின் முன்பு நன்கு தெரியும் இடத்தில் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் பின்வரும் வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும்.

திருச்சி, மதுரை, விருதுநகர்

திருச்சி, மதுரை, விருதுநகர்

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை மாநகர் வழியாக வந்து ராமநாதபுரம் சுற்றுச் சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மேலூர், ஒத்தக்கடை ராம்நாடு ரோடு நான்கு வழி சாலை வழியாக பசும்பொன் செல்லவும் அல்லது மேலூர் , சிவகங்கை ரோடு வழியாக பசும்பொன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்ட வாகனங்கள்

தென் மாவட்ட வாகனங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சாயல்குடி கோவிலாங்குளம் அல்லது அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்லவேண்டும். திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாகனங்கள் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி அல்லது தூத்துக்குடி சூரங்குடி சாயல்குடி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.

இந்த பக்கம் செல்ல வேண்டாம்

இந்த பக்கம் செல்ல வேண்டாம்

மதுரையில் இருந்து கிளம்பும் வாகனங்கள் மற்றும் மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் வரிசியூர், பூவந்தி வழியாகவும், பழைய சிலைமான் ரோடு வழியாகவும், நெடுங்குளம் வழியாகவும் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் திருவாதவூர் வழியாக வாகனங்கள் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+