வீட்டுக்கு வா...இல்லாட்டி பெயில்தான் - பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை. ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மாணவிகளிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் ஹபீப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்: உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர்கள், உடல்கல்வி ஆசிரியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சிக்கியுள்ளவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப்.
ஆசிரியர் ஹபீப் மாணவிகளை மிரட்டி பணிய வைக்க முயன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஹபீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிவியல் ஆசிரியர்
முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ஹபீப்.
இவர் மாணவிகளின் பெற்றோர் இல்லாத நேரங்களில் மாணவிகளை தொடர்பு கொண்டு சபலத்துடன் பேசுவாராம்.

பெயில் ஆகி விடுவாய்
உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் எனவும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார் ஹபீப்

வைரலான ஆடியோ
நாம் பேசியது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள் மட்டுமே இருக்கட்டும் எனவும் ஹபீப் பேசியுள்ளார்
ஹபீப் பள்ளி மாணவிகளுடன் ஆபசமாக பேசிய ஆடியோ பதிவு தற்போது வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரகசிய இடத்தில் விசாரணை
ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து இது குறித்து தற்போது ராமநாதபுரம் ஏடிஎஸ்பி தலைமையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது
ஆடியோவில் உள்ளது ஹபீப் குரல்தான் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாணவிகளிடம் ஆபசமாக பேசி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஹபீப்பை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications