ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்!

பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய அந்த நபர்- வீடியோ

    இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ஸ்கைப் கால் மூலம் இந்த மொத்த கொலையும் அரங்கேறி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி நாட்டு அரசாங்கம் இந்த கொலையை செய்ததை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இடது கையாக செயல்படும் சாத் அல் கவ்தானி என்று நபர்தான் இந்த கொலையை முன்னின்று நடத்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட ஜமால்

    கொலை செய்யப்பட்ட ஜமால்

    அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிசவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். இவர் அந்த தூதுரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார்.

    கொடூரமான கொலை

    கொடூரமான கொலை

    இவர் 18 பேர் கொண்ட படையால் கொல்லப்பட்டார். கடந்த சில வருடங்களாக இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்டதை சவுதி அரசும் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

    யார் இவர்

    யார் இவர்

    சாத் அல் கவ்தானி, சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக வலைதள பக்கத்தை இவர்தான் கவனித்து வருகிறார். அங்கு உள்ள சைபர் நெட்வொர்க்கிங் தலைவர் இவர்தான். சல்மானிற்கு மிகவும் நெருக்கமான நபர் இவர் என்று கூறப்படுகிறது. சல்மான் பாதுகாப்பிற்கு நிஜ உலகிலும், இணைய உலகிலும் இவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

    என்னவெல்லாம் செய்துள்ளார்

    என்னவெல்லாம் செய்துள்ளார்

    சவுதியில் அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது, லெபனான் பிரதமர் கைதானது, அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ச்சியாக நிறைய முடிவுகளை எடுப்பது, பல கார்ப்பரேட் முதலைகளை கைக்குள் வைத்து பிசினஸ் செய்வது என்று சல்மான் எடுத்த அனைத்து முடிவிற்கும் பின்னால் இருந்து உதவியது சாத் அல் கவ்தானிதான். சவுதியின் மிகவும் வலிமையான ''ஹிட் மேன்'' இவர் என்று அழைக்கப்படுகிறார்.

    மாட்டிக்கொண்டார்

    மாட்டிக்கொண்டார்

    இந்த நிலையில் ஜமாலின் கொலையை அரங்கேற்றியது இவர்தான் என்று கூறப்படுகிறது. ஜமால் கொலை செய்யப்பட போது, சாத் அல் கவ்தானி இஸ்தான்புல்லில் இல்லை. ஆனால் ஒரு ஸ்கைப் கால் மூலம்தான் சவுதியில் இருந்து கொண்டே இந்த மொத்த திட்டத்தையும் இவர் வழிநடத்தி இருக்கிறார். ஸ்கைப் கால் மூலம் எப்படி கொலை செய்ய வேண்டும், உடலை என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரையும் வழி நடத்தி உள்ளார்.

    சப்போர்ட் இருக்கிறது

    சப்போர்ட் இருக்கிறது

    ஆனால் இவர் ஸ்கைப் கால் செய்த விவரம் துருக்கி நாட்டிடம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சல்மான் ஏற்கனவே சாத் அல் கவ்தானியை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். ஆனால், அதேசமயம் சாத் அல் கவ்தானி இன்னும் சல்மானின் மாளிகையில் அவருடன்தான் இருக்கிறார். வேலையைவிட்டு நீக்கியது வெறுமனே நாடகம். அவரை கைது எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று தகவல் வருகிறது. உலக நாடுகளை அதிரவைத்த இந்த கொலையை அரங்கேற்றியது ஒரு சவுதி ஹிட் மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A Skype call from Mohammed Bin Salman's close aide helped to kill Saudi Journo Jamal Khashoggi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X