சேலத்தில் உரிய ஆவணமின்றி.. எடுத்துச் செல்லப்பட்ட 237 கிலோ தங்கம் பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி
சேலம்: உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 37 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி பணம், நகைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் ஆய்வு மேற்கொண்டர்.
அதில் 37 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான 237 கிலோ தங்கம் இருப்பதைப் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். மேலும், எவ்வித உரிய ஆவணமும் இன்றி அந்த நகைகள் எடுத்துச் செல்லப்படுவதும் தெரியவந்தது.
அந்தப் பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யவே நகைகள் கொண்டு செல்லப்பட்டதாக வேனில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள 37 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் சேலம் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications