ஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்!
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழி ஒன்று அந்த மாவட்டம் முழுக்க தற்போது பேசுபொருளாகி பெரிய செய்தியாகி மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் அருகே இருக்கும் ரங்கமோவூர் பகுதியில் உள்ள கிராமம்தான் எருமைசாட்டுக்காடு. இந்த கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர்தான் தற்போது சேலம் முழுக்க வைரலாகி உள்ளார்.
அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வீடு பின்புறத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டி இருக்கிறார். தனது மூன்று மகன்கள் உடன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பதற்காக இவர் குழி தோண்டும் பணியில் இருக்கிறார்.

விவசாய குடும்பம்
இவர்கள் குடும்பம் விவசாய குடும்பம் ஆகும். இதற்கான தண்ணீர் தேவைக்காக அந்த குழியை இவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அப்போது அந்த குழியில் புதையல் இருந்ததாக கூறப்படுகிறது. குழியை ஆழமாக தோண்டியதில் ஒரு பழைய பானையில் புதையல் இருந்தது என்று கூறுகிறார்கள். இதை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி உடனே மாவட்டம் முழுக்க பரவியது.

தகவல் தெரிவிக்கப்பட்டது
இதை அடுத்து அந்த குழியை அக்கம்பக்கத்து ஊர் மக்கள் எல்லோரும் வந்து பார்த்தனர். அங்கே புதையல் இருப்பதாக வெளியான செய்தியை கேட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கே வர தொடங்கினார்கள். இந்த தகவல் உடனடியாக அந்த பகுதியின் வட்டாச்சியர் ஜானகிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் போலீசார்மற்றும் கிராம பணியாளர்கள் உடன் அங்கே வந்து சோதனை செய்தார்.

இல்லை
அந்த குழி தோண்டப்பட்ட இடத்தில் சோதனைகளை மேற்கொண்டார். அதோடு அந்த விவசாயி குடும்பத்திடமும் போலீசார் சோதனைகளையே மேற்கொண்டனர்.இந்த சோதனையில் , எங்கள் வீட்டு பின்புறத்தில் அப்படி எந்த விதமான புதையலும் கண்டுபிடிக்கப்படவில்லை. தவறான செய்தியை சிலர் பரப்புகிறார்கள். இதை நீங்கள் நம்ப வேண்டாம்.

தொடர் விசாரணை
எங்களுக்கு புதையல் கிடைத்து இருந்தால் அதை உங்களுக்கு கொடுத்து இருப்போம். யாரோ சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள், என்று அந்த குடும்பம் கூறியுள்ளது. ஆனால் அந்த ஊர் மக்கள் சிலர் அங்கே புதையல் இருந்தது உண்மை என்று கூறியுள்ளனர். இதில் எது உண்மை என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications