சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடிப்பெருக்கு விழா... காவிரியில் பாதுகாப்பாக நீராடுங்கள்... சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Google Oneindia Tamil News

சேலம் : ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

ஆடி மாதத்தில் ஆடி 18 எனும் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, பொதுமக்கள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, குல தெய்வம், கோவில் வழிபாடு செய்து வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காவிரி ஆற்றை தெய்வமான வணங்குவது வழக்கம். அதனால் இந்த ஆறில் பல்வேறு இடங்களில் புனித நீராடி அருகில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம். தற்போது, கனமழையால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றியில் புனித நீராட பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுமட்டும் நடந்தது கேம் ஓவர்? எடப்பாடி அணியில் எகிறிய பிபி! ஒரே டென்சன்! ஓபிஎஸ்ஸுக்கு புது நம்பிக்கை இதுமட்டும் நடந்தது கேம் ஓவர்? எடப்பாடி அணியில் எகிறிய பிபி! ஒரே டென்சன்! ஓபிஎஸ்ஸுக்கு புது நம்பிக்கை

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சேலம் ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டம், மேட்டூா் அணை முழுக் கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், அணைக்கு வரும் 75,000 கன அடி நீரும் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. மேலும் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சுமாா் 1 லட்சம் கனஅடிக்குமேல் தண்ணீா் வர வாய்ப்புள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுமையாக உபரிநீராக வெளியேற்றப்படும்.

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொது மக்கள் புனித நீராட வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம். மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம். மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகள், நீர்படுக்கைகள், நீர்வழித்தடங்கள், மேட்டூர் அணைப் பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள், பொதுமக்கள் நீா் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

நீரில் இறங்கி குளிக்க தடை

நீரில் இறங்கி குளிக்க தடை

குறிப்பாக காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள், சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரிக் கரையோரங்களில் நின்று வேடிக்கைப் பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

English summary
Salem district administration has advised the public to take a safe dip in the Kaveri on the occasion of Aadi Perukku festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X