கொத்தடிமைக் கூட்டத்தை நம்பி பாஜக வந்திருக்கு.. ஜெ.மறைவுக்கு பிறகு.. அதிமுகவை விளாசிய மு.க ஸ்டாலின்
சேலம்: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்றும் பாஜகவிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டு நான்கு ஆண்டு காலம் காலத்தை நகர்த்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி எனவும் மு.க ஸ்டாலின் கடுமையாக அதிமுகவை விமர்சித்தார்.
சேலம் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை தந்தார். முதலில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அதிமுக மற்றும் பாஜகவையும் விமர்சித்து பேசினார். முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
கொத்தடிமைக் கூட்டம் அதிமுகவை நம்பி தேர்தலுக்கு வந்து இருக்கும் கூட்டம் பாஜக. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்று இருக்கும் தேர்தலில் தோல்வியை மட்டுமே பெற்று இருக்கும் கட்சிதான் இன்றைக்கு இருக்கும் அதிமுக அதை யாரும் மறந்து விடக்கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை தவிர அனைத்திலும் தோற்றது அதிமுக. ஆட்சியில் இருந்த போதே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேல்வி அடைந்தது.
ஊரக உள்ளாட்சிதேர்தலில் தோல்வி. சட்டமன்ற தேர்தலில் தோல்வி. திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி. தோல்வி மேல் தோல்வி அடைந்த கட்சி அதிமுக. சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்று சசிகலா காலை வாரிவிட்டு பாஜகவிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டு நான்கு ஆண்டு காலம் காலத்தை நகர்த்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
மூழ்கி கொண்டு இருக்கும் இரண்டு பேர் கை கோர்த்துக் கொள்வது போல அதிமுகவும் பாஜகவும் இன்று இருக்கு. நேற்றில் இருந்து ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவில் ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு தாங்கள் செய்யும் தவறுக்கு அதிமுகவையும் பொறுப்பாக்கும் தந்திரமாகக் கூட இருக்கலாம். அது உண்மையா என்று தெரியவில்லை" என்றார்.
முன்னதாக பாஜகவை கடுமையாக விமர்சித்த மு.க ஸ்டாலின் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலை ஒட்டித்தான் மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருகிறார். பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் சரிவடைந்துகொண்டே வருகிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும் எப்போதும் எடுப்பார்கள்.
கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் மீண்டும் சந்தித்ததால் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன் வரலாம். முழுமையாக தேய்ந்து போவதற்கு முன் பாஜக தேர்தலை நடத்த முயற்சிக்கலாம். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா அவர்கள், கடந்த 9 ஆண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொடுத்த சிறப்பு திட்டங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக்











Click it and Unblock the Notifications