நேற்று எஸ்பி, கலெக்டர பாராட்டுனீங்க! பிறகு ஏன் மாற்றம்! தவறு இல்லையெனில் கைது ஏன்? அண்ணாமலை கேள்வி!
சேலம் : கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரத்தில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளரை நேற்று அமைச்சர் பாராட்டிய நிலையில், இன்று மாற்றியது ஏன் எனவும், பள்ளி நிர்வாகிகள் மீது தவறு இல்லையெனில் கைது நடவடிக்கை ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது.
பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.

பள்ளி நிர்வாகிகள் கைது
இதுமட்டும் இன்றி பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீச்சு தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவாகரம் குறித்து காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டதோடு, பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம்
இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதோடு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

பள்ளி மாணவி மரணம்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பாக பணியாற்றியதாக நேற்று பேசிய அமைச்சர் ஒருவர் புகழ்ந்து பேசினார். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள்.

அண்ணாமலை விமர்சனம்
அதேபோல நேற்று மாணவியின் மரணம் குறித்து பேசிய தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று சொன்னார் ஆனால் பள்ளியின் நிர்வாகிகளான தாளாளர் முதல்வர் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் தவறே இல்லை என்றால் ஏன் கைது செய்ய வேண்டும்? சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஏன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மாவட்ட ஆட்சியரையும் பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் இதிலிருந்தே தமிழக அரசின் நடவடிக்கை முன்னுக்கு பின் முரணாக இருப்பது தெளிவாகப் புரிகிறது" என்றார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications