Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேஸ்புக்கில் லைவ்.. பாஜக அலுவலகத்திற்குள் பியூஷ் மனுஷ்.. அனல் பறக்க வாக்குவாதம்!

சேலத்தில் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாஜக அலுவலகத்தில் கேள்வி கேட்ட பியூஷ் மனுஷ் மீது சரமாரி தாக்குதல் | piyush manush

    சேலம்: சேலம் பாஜக அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் கேள்வி கேட்டதற்காக சரமாரியாக அடி வாங்கிய சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் தனது செயல்பாடுகளை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.

    பெரும் பரபரப்பாகியுள்ளது பியூஷ் மனுஷ் சம்பவம். சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த பாஜகவினரிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர்களும் பதில் கூறினார். ஆனால் அது பின்னர் கடும் மோதலாக மாறியுள்ளது.

    BJP members attack on Piyush manush

    இறுதியில் பாஜகவினர் பியூஷ் மனுஷை சரமாரியாக அடித்தனர். செருப்பாலும் அவர் அடிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு முன்பு பியூஷ் மனுஷ் சேலம் பாஜக அலுவலகத்திற்கு செல்வதை லைவ் போட்டுள்ளார். பேஸ்புக்கில் அவர் அலுவலகத்திற்கு முன்பு நின்று பேசியபடி அந்த லைவ் தொடங்கியது. வாசலில் இருந்த போலீஸ்காரரிடம் மேலே யாராவது இருக்காங்களா சார் என்று கேட்டபடி செல்கிறார் பியூஷ் மனுஷ்.

    பின்னர் மேலே வந்த அவர் அங்கிருந்தவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் பேச்சு நார்மலாகத்தான் உள்ளது. ஆனால் போகப் போக அனல் கூடுகிறது. பாஜக அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும் பியூஷ் மனுஷுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் மூண்டு அவர் தாக்கப்படுகிறார். அத்தோடு அந்த லைவ் முடிந்துள்ளது.

    தமிழிசை கண்டனம்

    இந்த நிலையில் பேஸ்புக்கில் இப்படி லைவ் போட்டு பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்த பியூஷ் மனுஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், முகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத்தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+