முதல் குறி.. தங்கமணி.. 'மின்சார துறை ஊழல்கள்'.. அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி.. ஷாக் பேட்டி
சேலம்: கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் மின்சாரத்துறையில் நடந்த ஊழல் வெளிக்கொண்டு வரப்படும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேலத்தில் தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளை கொடுத்து வந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

பூஜ்ஜிய நிலை
சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்கிற நிலையே இல்லை, மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணியில் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர். விரைவில் கொரோனா பரவல் பூஜ்ஜிய நிலைக்கு வரும் என்றார்.

மருந்தகங்கள்
மருத்துவர்களின் ஒப்புகை சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்தால் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு வாரத்தில் சேலம் இரும்பாலையில் கூடுதலாக 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுவிடும் என்றார்.

அமைச்சர் குற்றச்சாட்டு
முந்தைய ஆட்சியாளர்கள் உரிய மின்பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊரடங்கு முடியும் வரை மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். இருப்பினும் அவசரம் மற்றும் அவசிய தேவைக்கு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். தமிழகத்தில் 100 சதவீதம் மின்தடை இருக்காது; அதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

வெளிகொண்டுவருவோம்
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையத்திற்கு கொரோனா சிகிச்சைக்காக தடையில்லா உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பிய உடன் மின்சாரத்துறையில் நடந்த ஊழல் வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்தார். அவரை குறிவைத்து தான் செந்தில் பாலாஜி இப்படி பேசியுள்ளதாக தெரிகிறது.. கடந்த ஆட்சியில் நடந்த மின்சாரத்துறை ஊழல்களை வெளிக்கொண்டுவரணும் என்பதில் உறுதியாக உள்ளார். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications