புஷ்பா புருஷன்ஸ்.. சல்லடை போட்டு தேடி கிடைத்த "அற்புதமான மனைவி".. சேலம் கோர்ட்டுல என்னாச்சு தெரியுமா
சேலம்: கூடா நட்பு கேடாய்தான் முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது சேலம் புஷ்பா விவகாரம்.. யார் இந்த புஷ்பா?
கடந்த 28ம் தேதி அதிகாலை சேலம் ரயிலில், 26 வயது மனைவியுடன் பயணிக்கிறார் கணவர்.. விடிகாலையில் கண்விழித்து பார்த்தபோது, அந்த மனைவியை காணவில்லை. இதனால் சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் தந்தார்.

தொழிலாளிகள்: போலீசாரும் காணாமல் போன பெண்ணை தேடி வந்தநிலையில், மதுரையில் அந்த பெண்ணை மீட்டனர். அங்கு ஒரு கட்டிட தொழிலாளியுடன் அந்த பெண் குடும்பம் நடத்திக்கொண்டிருந்ததையும் அறிந்தனர். பிறகு, சேலத்துக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவரது பெயர் புஷ்பா என்று தெரியவந்தது.
அப்போது புஷ்பா சொல்லும்போது, "என்னை காணவில்லை என்று உங்களிடம் புகார் தந்தவர், என்னுடைய உண்மையான கணவரே கிடையாது.. அவர் எனக்கு 4வது கணவன்.. ஒரு வருஷமாக அவனுக்கு நான்தான் அடைக்கலம் தந்து, என்கூடவே வெச்சிருந்தேன்" என்றபோது அதிர்ந்து போய் நின்றார்கள் போலீசார்.
4வது கணவர்: சேலம் ஆத்தூரை சேர்ந்தரை முதன்முதலில் திருமணம் செய்துள்ள புஷ்பாவுக்கு 2 மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.. ஆனாலும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுவிட்டு, 3 குழந்தைகளையும் அவரிடமே விட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் புஷ்பா. கட்டிட வேலை செய்யும் இடத்தில் வேறு சிலரிடமும் நெருக்கமாகி உள்ளார்.. பிறகு, 4வதாக, கடலூரை சேர்ந்த நபருடன் பழகி, ஒரு வருடத்துக்கும் மேலாக அவருடனே குடும்பம் நடத்தி உள்ளார்.
இந்த நபருடன் ரயிலில் சென்றபோதுதான், பாதி வழியில் அவரை கழட்டிவிட்டு, 5வதாக மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியுடன், குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இப்போது அனைத்து விஷயமே அம்பலமானதால், இந்த பெண்ணை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணை முடிய, இரவு நேரம் ஆகிவிட்டதால், சேலத்தில் உள்ள அரசு காப்பகத்தில், புஷ்பாவை போலீசார் தங்கவைத்தனர்.
ஆசைப்பட்ட பெண் : பிறகு காலையில்,சேலம் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .. ஆனால், புஷ்பாவின் வண்டவாளம் தெரிந்துவிட்டதால், நீதிமன்ற விசாரணைக்கு எந்த கணவருமே வரவில்லையாம். இதனால், புஷ்பாவை யாருடன் அனுப்புவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது புஷ்பா, என்னுடைய விருப்பத்தின் பேரில், நான் தனியாக செல்கிறேன் என்று சொன்னார்.
தன் விருப்பம்போல வாழ அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாலும், முறைப்படி அவர்களுக்குள் ஏதும் திருமணம் நடைபெறாததாலும், வழக்கை முடித்து வைத்த நீதிபதி, புஷ்பாவை அனுப்பி வைத்தார்.
"ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை" என்று நம்முடைய கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்தது எவ்வளவு சத்தியமான உண்மை???!!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications