கிஃப்ட்டை பிரித்து பார்த்ததும் நெகிழ்ந்துபோன எடப்பாடி..! மேடையிலேயே கண் கலங்கிட்டாரே! ஆஹா!
சேலம் : சேலத்தில் இன்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேடைக்கு வந்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு பரிசைக் கொடுத்து, அதனை இப்போதே பிரித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, அதனைப் பிரித்துப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, நெகிழ்ந்துபோய் கண் கலங்கியுள்ளார். இது அங்கிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிக்குப் போட்டி
அதிமுகவில் தொடர்ந்து வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், 2024 தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி பேச்சுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்தகட்டமாக வரும் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடிக்கு பரிசு
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, இன்று சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இணைந்து ஸ்பெஷல் பரிசு ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினர். வழக்கமாக பரிசுப் பொருட்களை வாங்கி தனது உதவியாளரிடம் கொடுத்து விடுவார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த முறை நிர்வாகிகள் அப்படி விடவில்லை. அங்கேயே பிரித்து பார்க்குமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டனர்.

நெகிழ்ந்து போன ஈபிஎஸ்
இதையடுத்து, நிர்வாகிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தப் பரிசைப் பிரித்து பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிசு, போட்டோ பிரேம் போல இருந்ததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தனது படம் இடம்பெற்றிருக்கும் என நினைத்தார் ஈபிஎஸ். ஆனால், கிஃப்ட் கவரை பிரித்து, அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார்.

தன்னை அறியாமல்
காரணம், அதிமுக நிர்வாகிகள் அளித்த அந்த போட்டோ ஃப்ரேமில் இருந்தது எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாளின் புகைப்படம். அதிமுக நிர்வாகிகள் அளித்த புகைப்பட பரிசில் தனது தாயாரின் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தார் எடப்பாடி பழனிசாமி. உடனே, தன்னை அறியாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்தது.

தொண்டர்கள் முழக்கம்
இதனால், மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளும் நெகிழ்ந்து போனார்கள். இந்த நிகழ்வு அங்கு ஒருவித நெகிழ்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். "தவசாயி அம்மாள் பெற்றெடுத்த தங்கமகன் எடப்பாடியார்", "சேலம் மன்னின் மைந்தர் எடப்பாடியார்" என்றும் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், எடப்பாடி பழனிசாமி நெகிழ்ந்து போயிருக்கிறார்.

தவசாயி அம்மாள்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காலமானார். அப்போது அவருக்கு 93 வயது. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்றிருந்தார். அங்கு இருந்தபோது தனது தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு உடனே காரில் கிளம்பி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications