சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை தூக்கில் போடுங்க.. ராஜலட்சுமி கொலையாளி கோர்ட்டில் கதறல்.. இதுவும் நடிப்பா தினேஷ்??

தவறு செய்துவிட்டேன் என்று ராஜலட்சுமியை கொன்ற தினேஷ் கதறினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாதி வெறிக்கு பலியான சிறுமி ராஜலட்சுமி... என்ன நடந்தது... வீடியோ

    சேலம்: "சார்... நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்... என்னை முதல்ல தூக்கில போட்டுடுங்க... சினிமாவ பார்த்து நான் இவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்" என்று சிறுமியை கொன்ற இளைஞர் கோர்ட் வாசலில் கதறினார்.

    ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து தலையை தூக்கி வீசியவர் தினேஷ்குமார் என்ற இளைஞர். சிறுமியை வன்கொடுமை செய்யும்போதும், தலையை துண்டிக்கும்போதும் சாதி பெயரை இழிவாக திட்டி திட்டியே வன்மத்தை அரங்கேற்றியவர்.

    அதிர்ந்த தமிழகம்

    அதிர்ந்த தமிழகம்

    கணவன் சிறுமியை வெட்டி கொன்றது தெரிந்ததும, மனைவி அவரை பைக்கில் உட்கார வைத்து கொண்டு உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் நேரடையாக ஒப்படைத்துவிட்டு போனார். சிறுமியின் இந்த படுகொலையினால தமிழகமே அதிர்ந்து போனது.

    [கலைச்செல்வியை கொன்னுடுங்க.. ஆட்டோ டிரைவர்களை தூண்டி விட்ட விபச்சார அழகிகள்!]

    குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    சிறுமியின் தலை, மனைவியின் சாட்சி உட்பட அனைத்து ஆதாரங்களும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் தினேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். போக்கோ சட்டம் பாய்ந்தது. குண்டர் சட்டம் பாய்ந்தது. சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

    குற்றப்பத்திரிகை

    குற்றப்பத்திரிகை

    ஆனால் பைத்தியம் பிடித்ததுபோலவும் சைக்கோ போலவும் நடிக்க ஆரமபித்து அந்த சாயமும் கொஞ்ச நேரத்திலேயே வெளுத்து போய்விட்டது. இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    மகளிர் கோர்ட்

    மகளிர் கோர்ட்

    இந்நிலையில், நேற்று தினேஷை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்த சேலம் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். கோர்ட்டில் நிறுத்தப்பட்ட பின்பு, அவரை வரும் 22ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.

    பெரிய தப்பு பண்ணிட்டேன்

    பெரிய தப்பு பண்ணிட்டேன்

    இதையடுத்து அவரை வெளியே போலீசார் மீண்டும் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். போலீஸ் ஜீப்பில் ஏற்ற போகும்போது, திடீரென தினேஷ் கத்தினார். "சார்.. என்னை கொன்னு போட்டுடுங்க... என்னை தூக்கில் போடுங்க சார்... சினிமாவை பார்த்துட்டு நான் ரொம்ப பெரிய தப்பை பண்ணிட்டேன்" என்று அழுது புலம்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திரும்பவும் நடிக்கிறார்

    திரும்பவும் நடிக்கிறார்

    இதை பற்றி போலீசார் கூறும்போது, "கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதற்காக அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அந்த கையெழுத்து போடும்போதே முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு தன் கையெழுத்தை கிறுக்கி தள்ளினார். அந்த கையெழுத்தில் தெளிவே இல்லை. திரும்பவும் மனநலம் பாதிக்கப்பட்டது போல வேலையை காட் ஆரம்பிச்சிட்டார் போல இருக்கிறது" என்றனர். ஆனாலும் பத்திரமாக மீண்டும் சிறைக்குள் அடைக்கப்பட்டார் தினேஷ்குமார்.

    English summary
    Give me the death Sentence: Salem Accust DineshKumar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X