காதல் என்ற பெயரில் பல முறை உல்லாசம்.. இரு முறை கலைக்கப்பட்ட கர்ப்பம்.. பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது
சேலம்: காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் விடிய விடிய காவல் நிலையத்தில் காத்திருந்தும் போலீஸார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலையிலிருந்து இரவு வரை அலைக்கழித்ததாகவும் அந்த பெண் பேட்டி அளித்துள்ளார்.
சேலம் மரவனேரி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து பிரியா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சேலம் செட்டிசாவடி காட்டுவளவுச் பகுதியை சேர்ந்தவர் ராஜ் திமுக ஊராட்சி துணைச் செயலாளர். அவரின் மகன் கலைச்செல்வன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்து பிரியா
இந்த நிலையில் கலைச்செல்வன் சூப்பர் மார்கெட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி உள்ளனர். நட்பு நாளடைவில் காதலாக மாறி கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். மேலும் இவர்கள் காதல் எல்லை மீறிய காரணத்தினால் இந்து பிரியா கர்ப்பமாக உள்ளார்.

தனியார் மருத்துவமனை
இந்த நிலையில் சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார். மேலும் இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்து பிரியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலைச்செல்வன் தனது மொபைல் எண்ணை மாற்றி சேலத்திலிருந்து கோயம்புத்தூர் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்றார்.

சின்னத்தம்பி
இந்த நிலையில் கலைச்செல்வன் குடும்பத்தார் அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து சேலம் ஓமலூர் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள் தனிஷாவிற்கு திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இவரின் திருமணம் 26 -ஆம் தேதியான நாளை சேலம் திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.

கலைச்செல்வன்
இதனை அறிந்த இந்து பிரியா தனது உறவினர்களுடன் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலைச்செல்வன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கேட்டுள்ளார். அவரது உறவினர்கள் இந்து பிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக நேற்று காலை 11 மணி அளவில் சென்றார். காவல்துறையினர் இவரது வழக்கை எடுத்துக் கொள்ளாமல் அலைக்கழித்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

காத்திருப்பு போராட்டம்
இதனால் இரவு 10 மணி ஆகியும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய புகாரை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர் இதனையடுத்து பாதிக்கப்பட்ட இந்து பிரியா அவர்கள் காவல் நிலையத்திற்குள் வழக்குப் பதிவு வரை வெளியில் செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கைது செய்யப்பட்ட சம்பவம்
இதனையடுத்து காவல்துறையினர் அவரின் வழக்கை ஏற்றுக்கொண்டு கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதலித்து ஏமாற்றிய வழக்கில் மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications