உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி வந்தாலும் ஆதரிப்போம்.. அமைச்சர் கே.என்.நேரு உறுதி
சேலம்: கருணாநிதியின் குடும்பத்திற்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம் என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது. திமுக கழகத் தொண்டர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள் என்றும் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போதே அவரது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. திமுகவினர் பல மாவட்டங்களில் இருந்தும் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். உதயநிதி விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று பலமுறை அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதனையடுத்து திமுகவினர் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற உடன் தனது மகன் இன்பநிதியுடன் வீடியோகாலில் பேசினார்.

வாரிசு அரசியல்
உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டதாகவும் வாரிசு அரசியல் பற்றியும் எதிர்கட்சியினர் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அமைச்சர்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் பற்றி பேசும் போது உதயநிதிக்கு மட்டுமல்ல அவரது மகனுக்கும் ஆதரவு தருவோம் என்று பேசியிருக்கிறார். சேலம் திமுக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர், 1986 முதல் 2022 வரை, 32 ஆம் ஆண்டு காலத்தில் எனக்காக முதல் முறையாக போடப்பட்டுள்ள கூட்டம் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

அதிமுகவினர் மீது வழக்கு
சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகள் ஒவ்வொரு ஆட்சியிலும் நிர்வாக சீர்திருத்தம், விலை உயர்வின் போது அரசுக்கு செலவு ஈடுகட்டும் வகையில் உயர்த்துவது இயல்பான செயல். என் மீது 9 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டது. பல நிர்வாகிகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் அதிமுக நிர்வாகிகள் மீது யார் மீதும் வழக்கு போடவில்லை. ஆனால் உங்கள் மீது வழக்குகள் போடாததால் தான் தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.

அதிமுகவின் கோட்டை
தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகம் பேசும் நிலையில் இனிவரும் காலங்களில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். எடப்பாடி பழனிசாமி யாரை கண்டு பயப்படமாட்டோம் என்று கூறுகிறார். சேலம் எம்ஜிஆர், ஜெயலலிதா கோட்டையாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் தளபதி கோட்டையாக மாறும், எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. சேலத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும். அதிமுக கோட்டை என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலத்தில் திமுகவில் ஒரு எம்எல்ஏ இருக்கும் நிலையில் வருங்காலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினராக மாறுவார்கள் என்று கூறினார்.

நிரந்தர முதல்வர்
அனைத்திலும் திமுக வெற்றிபெறும். திமுக ஜெயலலிதா, எம்ஜிஆரை பார்த்து உள்ளது. அவர்களையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திமுக இறுதி வரை வெற்றிபெறும் நிரந்தர முதல்வராக ஸ்டாலின் தான் இருப்பார்.
அதிமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடியுள்ளதா? யார் ஆட்சியில் தேனாறும், பாலாறும் ஓட முடியும் என்று கேட்டார் கே.என்.நேரு.

உதயநிதி மகனுக்கும் வாழ்க சொல்வோம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்களிடம் பூச்சாண்டி காட்டவேண்டாம், வாரிசு அரசியல் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள். உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது. திமுக கழகத் தொண்டர்கள் எப்போதும் கருணாநிதி குடும்பத்தினருக்கு நன்றியுடன் விசுவாசத்துடன் இருப்பவர்கள்.

திமுக வாக்குறுதிகள்
திமுகவில் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்ற கட்சி. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். நிதிசுமையை ஏற்றி வைத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டீர்களா என்று பலதிட்டங்கள் குறித்து கேட்கிறார்கள். நிச்சயம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆனால் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் பேப்பராகவும், வெத்துவேட்டாகவும் மட்டுமே இருந்தது. மேலும் அவசரஅவசரமாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதால் சேலத்தில் அதிமுக 10 சீட்டுகளை வெற்றி பெற்றார்கள். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி கொடுப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறினார் கே.என்.நேரு.
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications