மளமளவென நிரம்பும் மேட்டூர் அணை.. 1 லட்சம் கனஅடி நீர் வரத்தால் 105 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக இருந்தது.
கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன.

உபரி நீர் அதிகரிப்பு
கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீரு காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. மழை பெய்து வெள்ள நீரும் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் பிரதான அருவி, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவி, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 100 அடியாக அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 105 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை இன்னும் சில தினங்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணை திறக்க வாய்ப்பு
குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாத இறுதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications