காவிரி ஆற்றில் பெருகும் வெள்ளம்..மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக உயர்வு - விரைவில் நிரம்பும்
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்னும் சில தினங்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை மளமளவென நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன.
கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக இருந்தது.

உபரி நீர் அதிகரிப்பு
கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. மழை பெய்து வெள்ள நீரும் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் பிரதான அருவி, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவி, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 110 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 113 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை இன்னும் சில தினங்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாத இறுதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்!












Click it and Unblock the Notifications