"ஆர்.ஆர்.ஆர்." களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.. ஆஸ்கர் பட டைட்டிலுடன் சேலம் போலீஸ் எஸ்பி அறிக்கை
சேலம் மாவட்ட போலீஸார் பணியின் போது அனைவரிடமும் ஆர்ஆர்ஆர்-களை பின்பற்ற எஸ்பி உத்தரவு
சேலம்: ஆஸ்கரை வென்று உலக அளவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் புகழ்பெற்ற நிலையில் சேலம் மாவட்ட போலீஸார் பணியின் போது அனைவரிடமும் ஆர்.ஆர்.ஆர்.களை பின்பற்ற வேண்டும் என மாவட்ட எஸ் பி சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாகி நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடல் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றது. ரத்தம் ரணம் ரவுத்திரம் ஆகியவற்றின் சிறு குறியீடே ஆர்ஆர்ஆர் ஆகும்.
இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாட்டு நாட்டு பாடலுக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த பாடல் இன்று ஆஸ்கர் விருதை பெற்று தென்னிந்தியாவை உலக அளவில் புகழடையச் செய்துள்ளது.

ஆர்ஆர்ஆர்
இந்த ஆர்ஆர்ஆர் எனும் பெயரை நினைவூட்டுவது போல் சேலம் மாவட்ட போலீஸார் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளை ஆர்ஆர்ஆர் என அடையாளப்படுத்தி, சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், அனைவரிடமும் மரியாதைடனும் அன்புடனும் கண்டிப்புடனும் நடந்து காவல் பணி ஆற்ற வேண்டும்.

உடனடியாக விசாரிக்க வேண்டும்
காவல் நிலையத்துக்கு மனு கொடுக்க வருவோரை காக்க வைக்காமல், உடனடியாக விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்துக்களைத் தடுக்க, தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து, அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கோவில் திருவிழாக்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, விழா நடத்துவர்களிடம் கலந்து பேசி, எவ்வித பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் / வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களிடம் தினமும் பேசி அவர்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். நல்லவர்களுக்கு பாதுகாப்பாகவும், கெட்ட நடத்தை உள்ளவர்களுக்கு பயத்தையும் உண்டாக்கும் வகையிலும் உங்கள் பணி சிறந்து இருக்க வேண்டும்.

தனித்திறமை
ஒவ்வொரு காவலரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களது திறமைகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பாக வேலை வாங்குவது உயர் அதிகாரிகளின் திறமையாகும். பெண்கள், வயதானவர்களுக்குப் பாதுகாப்பு செய்தல், பள்ளி கல்லூரி பகுதிகளில் கண்காணித்தல் போன்ற பலவிதமான கலவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாகனத் தணிக்கை
வாகனத் தணிக்கையின்போது, மக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனத்தில், குடும்பத்துடன் பயணிக்கும் குடும்பத் தலைவரை, அவரது குடும்பத்தினர் முன்பாக அவமானப்படுத்தாமல், அவர் என்ன தவறு செய்திருக்கிறார்களோ, அதனை கண்ணியமாக எடுத்துச் சொல்லி, அதற்குரிய வழக்குப் பதிய வேண்டும். பிரச்சனை செய்பவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், அவர்கள் செய்யும் தவறுகளை படம் பிடிக்கவும், பின்னர் தவறுக்கேற்ப வழக்கு பதிவு செய்யவும் வேண்டும்.

Respect Recognition Rest
குறிப்பாக, தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைவரிடமும் மரியாதையுடன் (Respect) பேச வேண்டும். சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவரின் திறமைகளையும் கண்டறிந்து பாராட்ட (Recognition) வேண்டும். காவலர்களின் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்குப் போதிய ஓய்வு (Rest) வழங்கும் வகையில், அன்றாட பணிகளை திட்டமிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக உடல் நலன் இருப்பதில்லை. அதனால் தேவையான விடுமுறைகளை உடனடியாகத் வழங்க வேண்டும். இந்த மூன்று ஆர்ஆர்ஆர் (RRR)-களை கண்டிப்பாக செயல்படுத்தி, கண்ணியத்தோடு பணியாற்றி சேலம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications