அதிரடி.. டிடிவி மீட்டிங்? புகழேந்தியுடன் சிட்டிங்! ஓபிஎஸ்-ஐ கட்சிலருந்து தூக்குங்க! பறந்த புகார்..!
சேலம் : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தொடர்பு வைத்துள்ளதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழகத்திற்கு சேலத்தில் இருந்து புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக தலைமை அறிவிப்புபடி கடந்த ஜூன் 14-ஆம் தேதி அதிமுகவின் கோட்பாட்டிற்கு எதிராக செயல்பட்டாத முன்னாள் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி என்பவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதனால் கட்சித் தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை வழங்கிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பெங்களூர் புகழேந்தி
இந்த நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்திற்கு வரவழைத்து ஒரு மணிநேரம் பேசியுள்ளார். எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் மணிகண்டன் என்பவர் புகார் மனு ஒன்றை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஓபிஎஸ் சந்திப்பு
அப்போது அவர் கூறியது," அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை ஒரு மணி நேரத்துக்கு மேலாக சந்தித்து பேசியுள்ளார். பின்னர் வெளியே வந்த பெங்களூர் புகழேந்தி பன்னீர்செல்வத்தின் வீட்டு வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி குறித்து அநாகரிகமாக விமர்சித்துப் பேசியுள்ளார். இது கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை எடுக்க புகார்
அதிமுகவில் ஒற்றை தலைமையாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் உருவெடுப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நான் அளித்த புகார் மனுவிற்கு பொதுக்குழு கூட்டத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த பிறகு அடுத்தகட்ட கூட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார். திமுகவில் இருந்து வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. ஆனால் இந்த அதிமுக கோட்பாடுகளை உடைத்தெறிந்து திமுகவை பாராட்டுவதும், ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்தார்.

கட்சிக்கு துரோகம்
இதனிடையே பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக தினகரன் பேட்டி வாயிலாக தகவல்களைத் தெரிவித்துள்ளார். 'அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு கட்சிக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கண்ணியம் காரணமாக, ஓ பன்னீர்செல்வம் கட்சியில் நீடித்துக் கொண்டு கொண்டிருக்கிறார். அவர் மீது எடுக்கும் நடவடிக்கையை தள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் பரபரப்பு
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கழகச் செயலாளர்கள்,மாவட்ட செயலாளர்கள் தீர்மானமாக நிறைவேற்றி பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தக் கட்சியிலும் இரட்டை தலைமை என்பது இல்லை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்பொழுது இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது." என கூறியுள்ளார். இந்த விவகாரம் அதிமுகவில் மீண்டும் பரபரப்பை கூட்டியுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications