ப்ளூ கலரில் மாறிய சேலம் மெடிக்கல் மாணவி உடம்பு.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி.. யாரந்த திருமணமான நபர்
சேலம்: சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகே உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வருபவர் வர்ஷினி.. 22 வயதாகிறது.. இவரது திடீர் மரணம், சேலம் மாவட்டத்தையே அதிர செய்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. என்ன நடந்தது சேலம் மருத்துவ மாணவிக்கு?
திருநெல்வேலி, வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜனின் மகள்தான் வர்ஷினி, மருத்துவ கல்லூரி இறுதியாண்டு படிப்பு படித்து வந்தார்..

சேலம் மருத்துவ கல்லூரி
மருத்துவ கல்லூரிக்கு அருகேயுள்ள நல்லாம்பட்டி நாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் ஒரு அப்பார்ட்மென்ட் வீட்டில் தங்கி வந்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வர்ஷினி, 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் சேலத்திற்கு வந்தார்..
அப்பார்ட்மென்ட் 3வது மாடியில் வர்ஷினி
நேற்று காலையில், அவரது தோழி அட்சயா, வர்ஷினியை பார்ப்பதற்காக அப்பார்ட்மென்ட் வீட்டுக்கு வந்துள்ளார்.. அப்போது படுக்கையில் வர்ஷினி சடலமாக கிடந்ததை கண்டு அலறி உள்ளார்.. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்..
சடலத்தை பார்த்தபோது, வர்ஷினியின் கழுத்துப் பகுதி வீங்கி காணப்பட்டது.. கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் வர்ஷினியை யாராவது கொன்றிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.
கழுத்து வீக்கம், ப்ளூ கலரில் மாறிய உடம்பு
இது தொடர்பான விசாரணையில்தான், வர்ஷியின் காதல் விவகாரம் அம்பலமானது.. அதாவது வர்ஷினி திருநெல்வேலியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர்.. 2 குழந்தைகளும் உள்ளனர்..
ஆனாலும் அவரைத்தான் காதலித்து வந்துள்ளார்.. இந்த விஷயம் வர்ஷினியின் அப்பா வரதராஜனுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.. மகளை கண்டித்தார்.. பலவிதங்களில் அறிவுரை சொன்னார்.. இதனால் வர்ஷினி வீட்டில் தகராறுகள், வாக்குவாதங்களும் வெடித்துள்ளன..
தந்தை மகள் தகராறு
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வரதராஜன் மகளை பார்க்க வந்துள்ளார்.. அவர் இரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி போனபிறகுதான் இந்த கொலை நடந்திருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.
மாணவி அந்த அப்பார்ட்மென்ட்டில் 3வது மாடியில் தனியாக தங்கி வந்தார். அவரது உடலுக்கு அருகே தலையணை விழுந்து கிடந்துள்ளது.. காதலை ஏற்க மறுத்ததால், பெற்ற தகப்பனே மகளை தலையணையை முகத்தில் வைத்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதற்கேற்றவாறு வரதராஜன் இப்போது தலைமறைவாக உள்ளார்... அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது..
ப்ளூ கலரில் மாறியது
மாணவி உடம்பு ப்ளூகலரில் மாறி உள்ளதாம்.. அப்படியானால் விஷம் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. தற்போது வர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. பரிசோதனைக்கு பிறகே அதுகுறித்த உண்மை தெரியவரும் என்கிறார்கள்..
போலீசார் வேறு கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தந்தையை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்..
அப்பா எங்கே?
நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வரதராஜன், மகள் அறைக்கு வந்துள்ளதாகவும், இரவு 8.30 மணிக்கு அங்கிருக்கு கிளம்பி சென்றதாகவும் தெரிகிறது.. அந்த இடைப்பட்ட நேரத்தில் மகளுடன் நீண்ட நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது..
அதற்கு பிறகு அவர் தன்னுடைய வீட்டுக்கும் செல்லவில்லையாம்.. தந்தையே மகளை ஆவணக் கொலை செய்தாரா? அல்லது தந்தையை தவிர வேறு யாராவது வர்ஷினியை பார்க்க வந்தார்களா? அந்த அப்பார்ட்மெண்ட்டில் சிசிடிவி கேமரா உள்ளதா? என்ற விசாரணையிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.. இப்போதைக்கு மாணவி சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications