பெரியகுளம் பதறிடுச்சே.. சேலம் "பிரபலத்துக்கு" ஆன்லைனில் வந்த "நிர்வாண பெண்".. ஓட்டம் எடுத்த விஐபிகள்
சேலம்: தேனியில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே, சேலத்தில் அடுத்த அதிர்ச்சி ஆரம்பமாகி உள்ளது.. அப்படி என்ன நடந்தது?
தேனியில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. பெரியகுளம் எம்எல்ஏவாக இருப்பவர் சரவணக்குமார்.. 48 வயதாகிறது.. தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தன்னுடைய குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.
வீடியோ கால்: இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்ததாம்.. அதனை சரவணக்குமார் ஆன் செய்தபோது, ஒருத்தருமே பேசலையாம்.. அதனால் போனை துண்டித்துவிட்டார்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து, எம்எல்ஏவின் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது.. அதில், வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் ஆபாசமாக பேசுவது போன்று தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது.. இதை பார்த்து எம்எல்ஏ அதிர்ந்துபோய்விட்டார்.
மர்ம நபர்கள்: பிறகு பேசிய ஒரு மர்மநபர், கேட்கும் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவோம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.. இதனால் மேலும் பதறிய எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட நபர் சொன்ன, வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். ஆனால், உடனடியாக இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றுகூறி, தேனி சைபர் கிரைம் போலீசாருக்கும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. இந்த "செக்ஸி வீடியோவை" அனுப்பிய பெண் யார்? செல்போன் நம்பர் யாருடையது? பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண், இதெல்லாம் பற்றின விசாரணை கையில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு எம்எல்ஏ என்றும் பாராமல், செய்த இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தேனியில் ஏற்படுத்தி வருகிறது. இந்த அதிர்ச்சியே இன்னும் முடியாத நிலையில், அடுத்த அதிர்ச்சி, சேலத்தில் டமாரென விழுந்துள்ளது.
ஆபாச படம்: இந்த பெண்ணும் யார் என்று தெரியவில்லையாம்.. சேலம் தொழிலதிபர்களின் செல்போன்களுக்கு நிர்வாண படங்களை அனுப்பி வருகிறாராம்.. இடைப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின், 3 நாட்களுக்கு முன்பு செல்போனில் நிறைய நிர்வாண படங்கள் வந்திருக்கின்றன.. ஏதோ ஒரு செல்போன் நம்பரில் இருந்து, இளம்பெண்ணின் நிர்வாண படங்கள் ஏராளமாக வந்துள்ளது.
அதை பார்த்த அந்த தொழிலதிபர், யாரோ தெரியாமல், நம்பர் மாறிப்போய் அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்து, உடனடியாக அதை டெலிட் செய்துள்ளார்.. ஆனாலும் மறுபடியும் அதே பெண்ணின் நிர்வாண போட்டோக்கள் வந்திருக்கிறது. இதனால், அதிர்ந்த அந்த தொழிலதிபர், தன்னுடைய நண்பர்களான சில தறிப்பட்டறை அதிபர்களிடம் இதை பற்றி சொல்லி உள்ளார்.. ஆனால் அவர்களோ, தங்களது வாட்ஸ்அப்பிற்கும், இதே பெண், அவருடைய நிர்வாண படங்களை அனுப்பியிருக்கிறார் என்று சொன்னார்கள்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர், இதுதொடர்பாக புகார் ஏதும் கொடுக்காமல் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்து, விசாரிக்க சொல்லி உள்ளார்..
லாரி டிரைவர்: இதையடுத்து போலீசாரும் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.. இந்த நிர்வாண படத்துக்கு பின்னணியில் பணம் பறிக்கும் நோக்கம் உள்ளதா? அல்லது வேறு யாராவது அந்த பெண்ணை மிரட்டி, இப்படியெல்லாம் செய்ய வைக்கிறார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு கிளம்பியது. அதைவிட முக்கியமாக, இந்த நிர்வாண போட்டோக்களை அனுப்பவுது நிஜமாகவே ஒரு பெண்தானா? என்ற சந்தேகம் போலீசுக்கு வந்தது.
கடைசியில் பார்த்தால், அது நிஜமாகவே ஒரு பெண்தானாம்.. அதிலும் கல்யாணம் ஆன பெண்.. இவரது கணவர் ஒரு லாரி டிரைவர்.. இடைப்பாடி பகுதியில் கணவருடன்தான் வசித்து வருகிறார்.. இதற்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் உள்ள 2 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் நிரப்பும் வேலையை இந்த பெண் செய்து வந்தாராம்.. அந்த பெட்ரோல் பங்குக்கு, லாரி டிரைவர் வந்துள்ளார்.. அப்போதுதான் அவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஒரே குழப்பம்: ஆனால், எதற்காக நிர்வாண படங்களை அனுப்பி கொண்டிருக்கிறார் என்றுதான் இன்னும் தெரியவில்லையாம்.. அதுவும் இல்லாமல், கரெக்ட்டாக தொழிலதிபர்களை மட்டுமே குறித்து நிர்வாண போட்டோ ஏன் அனுப்ப வேண்டும்? இத்தனை தொழிலபதிபர்களின் போன் நம்பர் அந்த பெண்ணுக்கு எப்படி கிடைத்திருக்கும்? என்றும் தெரியவில்லையாம்..
பெண்களுக்கு, ஆண்கள் ஆபாச படங்களை அனுப்பி சிக்கி கொள்வது வழக்கமாக உள்ள நிலையில், ஆண்களுக்கு பெண்கள் ஆபாச படங்களை அனுப்ப துவங்கிவிட்டார்கள்.. இதெல்லாம் எங்கே போயி முடியுமோ?? கலிகாலம்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications