Vijay: கரூர் தவறை சேலத்திலும் செய்த விஜய்.. அப்பாவி தொழிலாளர் பலி.. தவெக கூட்டத்தில் நடந்தது என்ன
சேலம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது . திமுக, அதிமுகவை தீவிரமாக எதிர்த்து தவெக அரசியல் செய்து வருகிறது. தவெக தலைவர் விஜய் இன்று சேலத்தில் பிரச்சாரம் செய்தார். (TVK Vijay) கரூர் கூட்ட நெரிசல் துக்கத்தில் இருந்தே மக்கள் வெளி வராத நிலையில், சேலம் தவெக கூட்டத்தில் வட மாநில தொழிலாளி ஒருவர் மயக்கமடைந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக சேலம் நிகழ்வில் கூட்டங்களை தடுப்பதற்காக பாக்ஸ் வடிவில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சேலம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். 5,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை விட கூடுதலான மக்கள் கூட்டம் வந்திருந்தது. ஒரே அடையாள அட்டையை பலரும் கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்தனர். இறுதி நேரத்தில் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து பலர் உள்ளே சென்றனர்.

சேலத்தில் நடந்தது என்ன
விஜய் வருகைக்காக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கு நாற்கலிகள் கூட இல்லாததால் மக்கள் கடுமையான வெயிலில் கால் கடுக்க காத்திருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே பெண்கள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்தனர். அந்த இடத்தில் 2 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
இருப்பினும் கூட்டம் மற்றும் வெயில் அதிகமாக இருந்ததால் அது போதவில்லை. குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. வெயில் காரணமாக மக்க்ள மயக்கமடைந்துகொண்டே இருந்தனர். அப்போது கூட விஜய் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மக்களுக்கு உதவி செய்வது குறித்து எந்த வழிநடத்துதலும் இல்லை.
கரூரில் செய்த அதே தவறு
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ் (37). அவர் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வந்தார். இவரும் விஜயை பார்க்க நீண்ட நேரமாக காத்திருந்து மயக்கமடைந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே சூரஜ் பரிதாபகரமதாக உயிரிழந்தார்.
இதேபோல் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போதும் உரிய தவெக சார்பில் உரிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை. கரூரிலும் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அப்போது அதை பொருட்படுத்தாத விஜய் 41 மக்கள் உயிரிழந்தும் பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறை செய்திருப்பது குறிப்பித்தக்கது.
-
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே!











Click it and Unblock the Notifications