விபத்துக்குள்ளான லாரி மீது கார் பயங்கர மோதல்: ஓட்டுநர் காயம், உயிர் தப்பிய ஆட்சியர்
சேலம் அருகே திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சென்ற கார் சேலம் தாசநாயக்கன்பட்டி அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் டிரைவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலம் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருமணத்தை முடித்துக்கொண்டு இரவு சுமார் 9 மணி அளவில் சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இருந்து நாமக்கல் நோக்கி கார் சென்று கொண்டிருக்கும்போது தாசநாயக்கன்பட்டி அருகே நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று மழையின் காரணமாக விபத்துக்குள்ளாகி சேலம் நாமக்கல் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது
அப்போது மாவட்ட ஆட்சியரின் கார் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது அப்போது காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்
கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து உடனடியாக மற்றொரு கார் மூலம் மாவட்ட ஆட்சியரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் காயமடைந்த கார் ஓட்டுனரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கொட்டும் மழையில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் கார் விபத்துக்குள்ளாகி ஆட்சியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications