சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையின் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு.. மேலும் 14 நாட்கள் அடைக்கலம் வழங்கும் சிங்கப்பூர் அரசு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: இலங்கையில் மக்கள் போராட்டத்தால் உயிருக்கு பயந்து சிங்கப்பூரில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சேவின் அங்கு தங்க மேலும் 14 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே நாளுக்கு நாள் பொதுமக்கள் ஆளும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.

ஒவ்வொரு மாதம் 9ம் தேதியும் இலங்கையில் மக்கள் போராட்டம் வீரியமாக நடந்து. தவறான பொருளாதார கொள்கையால் நாட்டை சிதைத்தாக மக்கள் கோபமடைந்து ராஜபக்சேக்களின் குடும்பத்தை பதவி விலக கூறி வந்தனர்.

 கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு! கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!

போக்கு காட்டிய கோத்தபய

போக்கு காட்டிய கோத்தபய

அந்த வகையில் 2 மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இருப்பினும் அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் கோத்தபய ராஜபக்சே போக்கு காட்டி வந்தார். இடைக்கால அரசு, அனைத்து கட்சி அமைச்சரவை, ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமித்தது என நாட்டை மீட்பது போல் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அது அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

சிங்கப்பூரில் தஞ்சம்

சிங்கப்பூரில் தஞ்சம்

இதனால் கடந்த 9 ம் தேதி நாடு முழுவதும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் பயந்துபோன அவர் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ராணுவ பாதுகாப்பில் சில நாட்கள் இருந்தார். அதன்பிறகு 13ம் தேதி மாலத்தீவு சென்றார். அங்கிருந்து 14ம் தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

Recommended Video

    Rajapaksas உகாண்டா Factory-யில் ஈழத் தமிழர்கள்? | Gotabhaya கைது எப்போது? | *World
    புகலிடம் கொடுக்க மறுத்த சிங்கப்பூர்

    புகலிடம் கொடுக்க மறுத்த சிங்கப்பூர்

    இலங்கையில் மக்கள் கோபத்தில் உள்ளதால் கோத்தபய ராஜபக்சே பிற நாடுகளில் அடைக்கலம் தேடினார். இந்தியா மறுத்த நிலையில் தான் அவர் சிங்கப்பூர் சென்றார். இதனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு அடைக்கலாம் கொடுப்பதாக தகவல் பரவியது. இதனை அந்நாட்டு அரசு மறுத்தது. அவருக்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகலிடம் கோரவில்லை. அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை'' என்றார்.

     14 நாள் காலஅவகாசம் வழங்கல்

    14 நாள் காலஅவகாசம் வழங்கல்

    இதனால் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்குவதற்கான காலஅவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தான் தற்போது கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்க மேலும் 14 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் வசிக்கலாம். இருப்பினும் அதன்பிறகு அவர் இலங்கை திரும்பலாம் அல்லது அரபு நாட்டில் தஞ்சமடையலாம் என கூறப்பட்டு வருகிறது.

    English summary
    Gotabaya Rajapakse, who took refuge in Singapore fearing for his life due to the people's protest in Sri Lanka, has been allowed to stay there for another 14 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X