சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேலியோ டயட் காஸ்ட்லி உணவா? மாமிசம் கட்டாயமா? சிம்பிளான டயட் பரிந்துரை என்ன? டாக்டர் பரூக்

Google Oneindia Tamil News

சிவகங்கை: பேலியோ உணவு முறைகள் பர்ச்சை பதம் பார்க்கும் உணவு முறையா என்ற கேள்விக்கு சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பேலியோ பணம் படைத்தவர்களின் உணவு முறையா??? ஏழை எளியோரால் இதை கடைபிடிக்க முடியவில்லையே??? பர்சைப் பதம் பார்க்கும் உணவு முறையாக பேலியோ இருக்கிறது. இவ்வாறான பல கூற்றுகளைக் கடந்து வருகிறேன்.

இது குறித்த எனது விளக்கத்தை மீண்டும் தர விரும்புகிறேன். ஒரு காலத்தில் ( கிபி 2000க்கு முன்) நீரிழிவு ( Diabetes) ரத்த கொதிப்பு ( Hypertension) உடல் பருமன் ( obesity) சினைப்பை நீர்க்கட்டி (PCOD) கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் (Fatty liver)
போன்றவை பொருளாதாரத்தில் மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே அதிகம் வந்தது.

அய்யோ கொழுப்பை இஷ்டத்திற்கு சாப்பிடும் பேலியோ டயட்டை ஃபாலோ செய்தால் கிட்னி செயலழிப்பா?.. உண்மை என்ன?அய்யோ கொழுப்பை இஷ்டத்திற்கு சாப்பிடும் பேலியோ டயட்டை ஃபாலோ செய்தால் கிட்னி செயலழிப்பா?.. உண்மை என்ன?

நிலைமை வேறு

நிலைமை வேறு

ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கிறது. மேற்சொன்ன வாழ்வியல் நோய்கள் ஏழை பணக்காரன் சாதி சமய ஊர் வித்தியாசங்கள் பார்ப்பதில்லை. நாளுக்கு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு தொற்றா நோய்கள் (Non Communicable Diseases) சிகிச்சைக்காக வரும் மக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு மருத்துவமனைகளை நாடுவதில் பெரும்பான்மை கீழ்தட்டு நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை எளியோர் ஆவர்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

இவர்களிடம் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரக நோய் அதிகமாகி வருவது. எதைக் காட்டுகிறது? நாம் அன்றாடம் கடைபிடிக்கும் வாழ்வியலில் பொருளாதாரத்தின் அடுக்குகளுக்கும் அனைத்துக்கும் பொதுவான ஏதோவொன்று இருக்கிறது. அது என்ன?
இன்னுமா.. அது என்னவென்று தெரியாதவாறு நடிக்கப்போகிறோம்.

12 மணிநேரம் உழைப்பவருக்கும் நீரிழிவு

12 மணிநேரம் உழைப்பவருக்கும் நீரிழிவு

அனைத்து தொற்றா நோய்களுக்கும் முதல் நிலை சிகிச்சை முறையாக இருப்பது "வாழ்வியல் மாற்றம்" தான் இதை LIFE STYLE MODIFICATION என்கிறோம். அதில் முக்கியமான பங்கு உணவு முறை மாற்றம் DIETARY MODIFICATION காரணம் தினமும் 12 மணிநேரம் கழனியில் உழைப்பவருக்கும் நீரிழிவு வருகிறது.

உடல் உழைப்பு

உடல் உழைப்பு

சிறப்பான உடல் உழைப்பை வழங்கும் பலருக்கும் ரத்த கொதிப்பு நீரிழிவு இரண்டும் இருக்கிறது. எனவே , உடல் உழைப்பு மட்டுமே ஒருவரை தொற்றா நோய்களில் இருந்து பெருமளவு காப்பதில்லை என்பது புலனாகும். நாம் தினமும் மூன்று முறை எடுக்கும் விசயத்தில் தான் முக்கியமான நோய்க்காரணி இருக்கிறது. அது நம் "உணவு"சராசரி தமிழன் தனது ஒருநாளைய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய மிக அதிகமாக மாவுச்சத்து எனும் கார்ப்போஹைட்ரேட்சை நம்பி இருக்கிறான்
தினமும் 400 கிராம் மாவுச்சத்தை சாப்பிட்டு வருகிறோம்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

தானியங்கள் சார்ந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 200 முதல் 400 கிராம் மாவுச்சத்து எடுத்தே வருகிறார்கள். இன்னும் ஏழை எளியோரால் விலை அதிகம் கொடுத்து புரதச்சத்து நிரம்பிய மாமிசம் மீன் போன்ற உணவுகளை வாங்க இயலாது. எனவே அவர்கள் தான் மிகுதியான அளவு மாவுச்சத்தை உண்கிறார்கள். பணம் படைத்தவர்கள் படித்தவர்கள் ஓரளவு கல்வி ஞானம் கொண்டு கூகுள்/ யூட்யூப் என்று தேடியேனும் ஏதேனும் ஒரு டயட் முறையை கடைபிடித்து எடையைக் குறைக்கிறார்கள் அல்லது மாவுச்சத்தை குறைத்து உண்பதின் முக்கியத்துவத்தை அறிகிறார்கள்.

புரதச் சத்து

புரதச் சத்து

புரதச்சத்தின் மகிமையை உணர்ந்து தங்களது உணவில் அதை சேர்த்துக்கொள்கிறார்கள். பேலியோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டவர்கள் கொழுப்பின் மீது அச்சம் இல்லாமல் அதை அணுகுகிறார்கள். ஆனால் பாவப்பட்டவர்கள் படிப்பறிவற்ற ஏழை சனங்கள் மட்டுமே.
அவர்கள் வேறு வழியே இன்று மூன்று வேளையும் அரிசி அல்லது கோதுமை சார்ந்த வாழ்க்கை முறையிலேயே தொடர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்றாக பேலியோ எனும் உணவு முறை இருப்பதை அவர்களிடம் இன்னும் வீரியத்துடன் கொண்டு சேர்க்க வேண்டியது நம் பொறுப்பு.

பேலியோ என்றாலே மாமிசம்

பேலியோ என்றாலே மாமிசம்

பேலியோ என்றாலே மாமிசம், பேலியோ என்றாலே காஸ்ட்லி என்றொரு பிம்பம் தோன்றிவிட்டிருக்கிறது. இந்த பிம்பத்தை நாம் தான் உடைக்க வேண்டும். பேலியோவின் அடிப்படை இதுவே 400 கிராம் எடுத்து வந்த கார்ப்போஹைட்ரேட்சை முடிந்த அளவு குறைப்பது தேவையான அளவு புரதச்சத்தை உண்பது. இவையன்றி தேவையான சக்தியை கொழுப்புணவை எடுத்து ஈடு செய்வது. மேற்சொனனவற்றில் மாவுச்சத்தை எவ்வளவு குறைப்பது? என்பது ஒருவருக்கு இருக்கும் உடல் பருமன் / நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்களைப் பொறுத்தும் அவர் தினமும் செய்யும் உடல் உழைப்பை பொருத்தும் மாறுபடும். எனினும் தற்போதைய நிலையில் பொருளாதாரத்தில் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும் மக்களுக்கான பொதுவான பேலியோ உணவுப் பரிந்துரை இதுவே காலை 100 கிராம் வறுத்த / அவித்த நிலக்கடலை அல்லது 200 மில்லி பால் அதனுடன் 20 கிராம் வெண்ணெய் கலந்து டீ அல்லது காபி கலந்து பருகலாம்.

வெண்ணெய்யை தவிருங்கள்

வெண்ணெய்யை தவிருங்கள்


( இதை பட்டர் டீ/காபி)
( எடை குறைய விரும்புபவர்கள் பால் மற்றும் வெண்ணெயை தவிர்ப்பது நலம்)
மதியம்
100 கிராம் கஞ்சி வடிகட்டப்பட்ட சோறு
+
100 கிராம் காய்கறி
+
1 முட்டை / 100 கிராம் கோழிக்கறி
இரவு
4 முட்டைகள்
அல்லது
250 கிராம் கோழிக்கறி ( வாரம் ஒரு நாள்)
அல்லது
200 கிராம் பனீர்
பேலியோ ஸ்நாக்ஸ்
கொய்யாகாய்
வெள்ளரிக்காய்
தேங்காய்
பேலியோ ட்ரிங்க்ஸ்
உப்பிட்ட எலுமிச்சை சாறு
உப்பிட்ட நெல்லிச்சாறு
இனிப்பில்லாத லெமன் டீ
இனிப்பில்லாத ப்ளாக் டீ/காபி
இனிப்பில்லாத க்ரீன் டீ

புகை, மதுவை விடுங்கள்

புகை, மதுவை விடுங்கள்

மேற்சொன்ன உணவு முறையுடன் தினமும் 1 மணிநேரம் மித வேக நடை போதுமானது. கூடவே புகை / மது போன்ற பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். பேலியோ எனும் இந்த உணவுப்புரட்சி மற்றும் உணவு குறித்த மாற்று சிந்தனை சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்றே விரும்புகிறோம்.

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய்

நீரிழிவு, ரத்தகொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய் போன்றவை பணக்காரர்களுக்கானது மட்டுமன்று அதே போன்று தான் பேலியோ உணவு முறையும் பேலியோ என்ற வார்த்தை உங்களுக்கு பிடிக்கவில்லையா தாராளமாக குறை மாவு உணவு முறை என்று அழைத்துக் கொள்ளுங்கள். இந்தப்புரிதலை அடைய கொஞ்சம் ஆழமான தேடலும் புரிதலும் மெனக்கெடலும் அவசியமாகின்றது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

English summary
Sivagangai government Doctor Farook Abdulla explains about Paleo diet belongs to rich people only?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X