பார்மலின்..அது பிணத்திற்கு தானே ! 300 கிலோ மீன்களை அள்ளிச் சென்ற அதிகாரிகள்! கிடுகிடு திருப்பத்தூர்!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த சில நாட்களாக பழைய மீன்கள் மற்றும் பிரேதங்களை பதப்படுத்தும் பார்மலின் கெமிக்கல்ஸ் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இறந்த உடல்கள் அழுகிப் போகாமல் பாதுகாத்து வைக்க பார்மலின் என்ற வேதிப்பொருள் பயன்படுகிறது. கடலில் பிடிக்கப்பட்டு பல நாட்கள் ஆன மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க இந்த வேதிப்பொருள் மீனில் கலக்கப்பட்டு வருகிறது.
பார்மலின் கலந்த மீனை முகர்ந்தால் மூக்கில் எரிச்சல் ஏற்படலாம். அந்த மீனை உண்டால், வயிறு உபாதைகள் ஏற்படலாம். நாள்பட்ட அளவில் சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். மேலும் சில தீவிர பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பார்மலின்
இந்நிலையில் தென் மாவட்டத்தில் மிக முக்கியமான மீன் சந்தையான சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் கடந்த சில நாட்களாக விற்கப்படும் மீன்கள் பழைய மீன்கள் மற்றும் பிரேதங்களை பதப்படுத்தும் பார்மலின் கெமிக்கல்ஸ் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருப்புத்தூர் மொத்த விற்பனை மீன் சந்தை பகுதியில் நள்ளிரவு 2 மணிக்கு அதிரடி ரெய்டு நடத்தினர்.

அதிரடி ரெய்டு
ரெய்டின் போது விற்பனைக்காக காட்சிக்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தனர். அதேபோன்று தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மீன்களையும் ஆய்வு செய்தனர். நடைபெற்ற ரெய்டில் சுமார் 300 கிலோ தரமில்லாத மீன்களை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் இருந்து சிவகங்கை, புதுக்கோட்டை, பொன்னமராவதி, துவரங்குறிச்சி, காரைக்குடி, கீழவளவு, சிங்கம்புணரி, கீழச்சிவல்பட்டி மற்றும் இதர சுற்றுப்புற பகுதிகளுக்கு மீன்கள் மொத்த விற்பனையில் வியாபாரிகள் இங்கிருந்து எடுத்து சென்று விற்கின்றனர்.

மீன்கள் பறிமுதல்
மீன்களில் பார்மலின் கெமிக்கல்ஸ் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் பழைய மீன்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில் அதிரடியாக நள்ளிரவு 2 மணிக்கு ரெய்டு நடத்தினர். மேலும் மீன் விற்பனை நிலையங்களில் அதிகமானோர் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாது இருந்தது குறித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் படி உணவு பாதுகாப்பு உரிமம் பெற ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் அறிவுறுத்தினார்.

எப்படி கண்டுபிடிப்பது?
மேலும் உரிமம் பெறாமல் தொடர்ந்து செயல்படுவது சட்டவிரோதமாகும் தொடர்ந்து இதுகுறித்து கண்டறியப்பட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். மொத்த விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாது தெருவில் விற்பனை செய்யும் மீன் விற்பனையாளர்களும் உரிமம் பெற வேண்டியது கட்டாயம் என கூறினார். மீனின் கண்கள் நன்றாக உள்ளனவா, செவில் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கடையில் பல நாட்கள் வைத்திருந்த மீன் புதிது போல் இருந்தாலே பார்மலின் கலந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications