Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருது சகோதரர்கள் குரு பூஜை! மாஸ் காட்டிய ஓ.பன்னீர்செல்வம்! திறந்தவெளி வேனில் கை அசைத்தபடி உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற மருது சகோதரர்கள் குருபூஜை நிகழ்வில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முக்குலத்தோர் அமைப்பினர் மிக உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இது மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அதில் கலந்துகொண்டனர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டதும் குதூகலத்தோடு திறந்தவெளி வேனில் நின்றவாறு கை அசைத்தபடி சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தந்தையை மகிழ்விப்பதற்காக மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி. தான் பெரும் கூட்டத்தை கூட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாராம்.

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள்

ஆங்கிலயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்ட இறுதி வரை ஆயுதம் தாங்கி போராடி, வீர மரணம் அடைந்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த பெரிய மருது, சின்ன மருது என்றழைக்கப்படும் மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்ற குருபூஜையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துகொண்டார்.

பிரச்சார வேனில்

பிரச்சார வேனில்

தங்கக்கவசம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஏற்கனவே மகிழ்ச்சியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு காளையார்கோவிலில் கிடைத்த உற்சாக வரவேற்பு அவரை குதூகலிக்க வைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வமே எதிர்பார்க்காத வகையில் முக்குலத்தோர் அமைப்புகள் சார்பிலும் ஆதரவாளர்கள் தரப்பிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டன. இதனால் பிரச்சார வேனில் திறந்தவெளியில் நின்றவாறு சாலையின் இருமருங்கிலும் கை அசைத்தபடி சென்றார்.

 ஓபிஎஸ் மகன்கள்

ஓபிஎஸ் மகன்கள்

ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க இவ்வளவு கூட்டம் கூடிய பின்னணியில் மகன்கள் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.யும், ஜெய பிரதீப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இன்றைக் காட்டிலும் வரும் 30ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்னும் கூடுதல் கூட்டத்தை திரட்டி மாஸ் காட்ட திட்டமிட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓபிஎஸ் வேனில் பயணித்தது கவனிக்கத்தக்கது.

நெற்கட்டும்செவல்

நெற்கட்டும்செவல்

இதேபோல் தான் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நெற்கட்டும் செவலிலும் திறந்தவெளி பிரச்சார வேனில் பயணித்து கவனம் ஈர்த்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே அக்.30-ல் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ள ஆர்.பி.உதயகுமார் உட்பட எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+