இந்து மதத்தை உடைக்க துடிப்பு.. திருமா-சீமான் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தனும்.. பரபரத்த ராமரவிக்குமார்
மயிலாடுதுறை: இந்து மதத்தை உடைக்க பிரிவினைவாதிகள் துடிக்கின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்த வேண்டும் என் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் ஆக்ரோஷமாக கூறினார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில் ராஜராஜ சோழன் தொடர்பான விவாதம் தினமும் நடந்து வருகிறது. ராஜராஜசோழன் இந்துவா, இல்லையா என்பது பற்றி பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் மயிலாடுதறையில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசியவிழாவாக கொண்டாட...
ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசிமாதம் சதயபெருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை மத்திய அரசு தேசிய விழாக அறிவிக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியின்போது உடையாளுரில் ராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்ற வாக்குறுதி அளித்தது. அதனை சதயநட்சத்திரத்திற்கு உள்ளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கருணாநிதி நினைவாக பேனா அமைக்கிறது. சைவத்தை காத்திட்ட ராஜராஜசோழனுக்கு மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து மிகப்பெரிய சிலை வைக்க வேண்டும்.

என்ஐஏ சோதனை நடத்த வேண்டும்
ராஜராஜசோழன் இந்துவா, தமிழனா, சைவமா, வைணமா என்ற பிரிவினைவாதம் பேசக்கூடிய திருமாவளவன் போன்றவர்கள் பிரிவினைவாதிகளாக இருந்துகொண்டு அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசிவருகின்றனர். பிரிவினைவாதிகளுக்கும், அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற காரணத்தினால் தேசிய புலனாய்வு முகமை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும்.

தேவையற்ற கருத்தியல் வாதம்
சனாதனத்தை வேரறுப்போம் என பேசக்கூடிய திருமாவளவன் போன்றவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை கண்டிக்கிறோம். ராஜராஜசோழன் காலத்தில் இந்துக்கள் இல்லை சைவர்கள், வைணவர்கள் என்று பிரிவினவாத அரசியல் பேசுகின்றனர். ராஜராஜசோழன் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து சென்றவர். அவருடைய புகழை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அறநிலையத்துறையை பெயர்மாற்றம் செய்ய வேண்டுமென்று கூறுகிறார். ராஜராஜசோழன் காலத்தில் தமிழ்நாடே இல்லை. இது தேவையற்ற வாதம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவையற்ற கருத்தியல்வாதத்தை விதிக்கின்றனர். இது கண்டனத்திற்கு உரியது.

இந்து மதத்தை உடைக்க...
ராஜராஜசோழன் காலத்தில் இருக்கக்கூடிய நடைமுறை போன்று இருக்க வேண்டுமென்றால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது. இந்து சமய திருக்கோயில்களை சார்ந்துதான் இருக்கிறது. இந்து மதத்தை உடைக்க வேண்டுமென்று பேசுகிறார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால் மக்களை திசை திருப்புவதற்காக ஆர்.ராசா போன்றவர்கள் இந்துக்கள் பற்றி சர்க்கரைக்கூறிய பேச்சுகளை பேசிவருகிறார். இந்துக்கள் மதம்மாறிவிட்டால் அவர்கள் புனிதர்களாக ஆகிவிடுவார்களா என்றார்.












Click it and Unblock the Notifications