மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் சிஎஸ்கே! பெங்களூரில் ஜஸ்ட் மிஸ்சில் தோல்வி! கோட்டைவிட்டது எங்கே?
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் சென்னை அணி துவக்கத்தில் இருந்து என்ன தவறை செய்ததோ..அதே தவறை தற்போது வரை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதே அணிக்கு பெரும் பாதகாமாக அமைந்து இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது.

முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள்
தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல, நடப்பு சீசனில் பெங்களூர் அணி வெளுத்து வாங்குவதால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தெர்வு செய்த சென்னை அணிக்கு எங்கே தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என சொல்லும் அளவிற்கு பெங்களூர் அணியின் பேட்டிங் இருந்தது.
பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருக்கும் பெங்களூர் மைதானத்தில் ரன்மழை பொழியும் என்பதால் இந்த போட்டி ஹைசேசிங் ஒன்றாக இருக்கும் என எதிபார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, பெங்களூர் அணி மிரட்டியது. ஜேகப் பெதல் - விராட் கோலி ஜோடி சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்தது. முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் எடுத்த இந்த ஜோடியை பதிரனா பிரித்தார். ஜகோப் பெதெல் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் 5 சிக்சர் விளாசி அதிரடி காட்டிய கோலி 33 பந்துகளில் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆயுஷ் மாத்ரே அதிரடி
அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாதால் கிட்டத்தட்ட சென்னை அணிக்கு ஆர்சிபி அடிபணிந்தது போலவே இருந்தது. இதனால் எளிதில் சென்னை அணி வெற்றி பெற்று விடும் என நம்பப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவுட் ஆப் செலபஸ் போல ரோமாரியோ ஷெபார்டு வெளுத்து கட்டினார். 14 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து மிரட்டினார். கலீல் அகமது மற்றும் பத்திரனாவில் கடைசி ஓவர்களை வெளுத்து வாங்கினார். குறைந்த பந்துகளில் பிஃப்டி போட்ட வீரராக ஷெபார்டு விளங்கினார். பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே அசத்தியது. சிஎஸ்கே வா இப்படி பேட்டிங் செய்கிறது என சென்னை ரசிகர்களே வியக்கும் அளவுக்கு துவக்கம் அப்படி இருந்தது. ஆயுஸ் மத்ரே பேட்டிங் தீ பறக்க இருந்தது. பேட்டில் பட்ட பந்துகள் எல்லாமே பவுண்டரி எல்லைக்கு பறந்தன. ரசீத் 14 ரன்க வெளியேறினார்.
சென்னை அணி தோல்வி
தொடர்ந்து 94 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் ஆயுஷ் மாத்ரே. மறுபுறம் ரவீந்திர ஜடேஜாவும் வெளுத்து எடுத்தார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்கம் சிறப்பாக இருந்தது. இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே அபாரமாக விளையாடினார்.
94 ரன்கள் எடுத்து நிகிடி பந்தில் 16 வது ஓவரில் அவுட் ஆனார். ஆயுஸ் மாத்ரே அவுட் ஆகாமல் களத்தில் இருக்கும் வரை சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என நினைக்கும் அளவுக்கு மேட்ச் சென்று கொண்டிருந்தது. ஆனால், மாத்ரே அவுட் ஆன அடுத்த பந்தில் அதிரடி மன்னன் பிரேவிஸ் எல்பிடபிள்யூ ஆட்டமிழந்தார். மறுபக்கம் ஜடேஜா வெற்றிக்காக போராடினார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் எடுத்து இருந்தார். 45 பந்துகளில் 2 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தோனி 8 பந்துகள் பிடித்து 12 ரன்கள் (1 சிக்சர்) எடுத்து எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய சிவம் துபே 8 ரன்கள் எடுத்து இருந்தார். கடைசி 2 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுக்க முடியாமல் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பரபரபான இந்த போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள்
* டோனியின் சொதப்பலான பேட்டிங்க், தோனியின் பேட்டிங் திறன் முன்பு போல இல்லை. ஒரு ஓவருக்கு 15 ரன்கள் சேஸ் செய்யும் அளவுக்கு டோனியால் தற்போது அதிரடி காட்ட முடியவில்லை.
* துபேவை முன்கூட்டியே தோனி இறக்கியிருக்க வேண்டும். அந்த ஓவரில் ஸ்பின் பவுலர் தான் களத்தில் இருந்தார். இதனால் அவர் அடித்து ஆட வாய்ப்பு இருந்தது. ஆனால், 5-வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய தோனி இக்கட்டான நேரத்தில் ரன் குவிக்க தடுமாறிவிட்டார். 8 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தோனிக்கு பதிலாக துபேவை இறக்கியிருந்தால் முடிவு மாறியிருக்கலாம்.
* கலீல் அகமது பந்து ஆரம்பத்தில் இருந்தே எடுபடவில்லை. ஆனால் அவருக்கு 19 வது ஓவரை போட சொல்லியிருக்க கூடாது. அதற்கு பதிலாக சாம் கரனையோ அல்லது கம்போஜையோ போட அழைத்திருக்கலாம். அந்த ஒரு ஓவரில் மட்டும் 33 ரன்களை விட்டுக்கொடுத்தார் கலீல் அகமது. இது ஆர்சிபி அணியை 200 ரன்களுக்கு மேல் குவிக்க காரணமாக அமைந்தது.
குட்டி டீ வில்லர்ஸ் பிரேவிசிஸ் அவுட்
* முன்பெல்லாம் தோனி, ஜடேஜா கடைசி 2 ஓவரில் களத்தில் இருந்தால் சிங்கிள் ஓடும் இடத்தில் 2 ரன்கள் ஓடி எடுப்பார்கள். இந்த மேட்ச்சில் அதனை செய்ய தவறிவிட்டார்கள். இரண்டு ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் இந்த மேட்ச்சில் சிஎஸ்கே வெற்றி பெற்று இருக்கும்.
* மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுவது குட்டி டீ வில்லர்ஸ் என்றழைக்கப்படும் பிரேவிஸ் அவுட் ஆனது தான். பிரேவிஸ் தான் சந்தித்த முதல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனதாக அம்பேயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து லெக் சைடில் தான் சென்றது. இதனால் எதிர்புறம் நின்றிருந்த ஜடேஜா ரிவியூவ் கேட்க சொல்லியிருக்கலாம். ஆனால் 15 செகண்ட் டைம் முடிந்த பிறகு ரிவியூவ் கேட்டதால் அது விக்கெட்டாகவே கொடுக்கப்பட்டது. இன்னொரு புறம் டிஆர் எஸ் கேட்பதற்காக ஸ்கிரீனில் டைம் ஓடும். அதுவும் காட்டப்படவில்லை. பின்னர் பிரிவியூவ்வில் அது அவுட் இல்லை என தெரியவந்தது. முன்பே டிஆர் எஸ் கேட்டிருந்தால் பிரேவிஸ் அதிரடி ஆட்டத்தை காண்பித்து இருந்திருப்பார்.
சாதகமாக இருந்து மாறியது
துவக்கம் முதலே இந்த போட்டியில் சென்னை அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னைக்கு டாஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. தோனியின் திட்டம் என்னமோ அதை கச்சிதமாக செய்து கொடுத்தார் மாத்ரே. சென்னை அணி டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கியது.
சென்னை அணி பவுலர்களும் இன்று வழக்கமான நாளை விட சிறப்பாக பந்து வீடி ஆர்சிபி அணியை 160 ரன்களுக்கு குறைவாகவே சுருட்டியிருக்கலாம். அந்த அளவுக்கு அவர்களது பந்துவீச்சு இருந்தது. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 54 ரன்கள் கொடுத்தது மேட்ச்சை தலைகீழாக மாற்றிவிட்டது. தோனி அந்த நேரத்தில் சாம் கரனுக்கோ அல்லது கம்போஜ்ஜுக்கோ கொடுத்து இருந்திருக்கலாம். மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications