திலக் வர்மா அல்ல.. வழிவிடும் ரிங்கு சிங்.. பிளேயிங் லெவன் ரேஸில் 2 வீரர்கள்.. கம்பீர் முடிவு என்ன?
சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் நடக்கவுள்ளது. வழக்கமாக போட்டிக்கு முதல் நாள் இரவு நடக்கும் பயிற்சியின் போதே அடுத்த நாளில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை கணிக்க முடியும். அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சியில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆசிய அணிகளில் இந்தியா மட்டுமே இன்னும் வெளியேறாமல் இருக்கிறது. ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி வெளியேறிவிட்ட சூழலில், பாகிஸ்தான் முடிவும் கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. அதேபோல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்று கணிக்கப்படுகிறது.

குரூப் ஏ சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன. இந்திய அணி 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். இதனால் ஆசிய கிரிக்கெட்டின் மானத்தை காப்பாற்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இப்படியான சூழலில் ஜிம்பாபவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி நாளை விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தப் பயிற்சியின் போது பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதன்படி அக்சர் படேல் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
அதேபோல் தந்தை உடல்நிலை காரணமாக சொந்த ஊர் சென்றிருந்த ரிங்கு சிங், இன்று பயிற்சியில் இணைந்தார். ஆனால் பெரிதாக ரிங்கு சிங் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. அதுமட்டுமல்லாமல் திலக் வர்மா மெயின் நெட்ஸில் விளையாடி உள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் சஞ்சு சாம்சனும் மெயின் நெட்ஸில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாடுவதும் உறுதியாகி உள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக மாற்றம் பெற உள்ளது.
நம்பர் 5 பேட்ஸ்மேனாக திலக் வர்மா களமிறங்கக் கூடும் என்று தெரிகிறது. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவை தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் எடுப்பார்கள் என்று தெரிகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications