For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கலவரத்திற்கு என்ன காரணம்.. சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்னதான் பிரச்சனை?

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறையால் பற்றி எரியும் இலங்கை- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடக்கிறது.

    ஆனால் கொழும்பில் இந்த கலவரத்திற்கான எந்த சுவடும் இல்லை. இலங்கை போரில் இருந்தே இஸ்லாமியர்களுக்கும், புத்த மத சிங்களர்களுக்கும் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது.

    எத்தனை அரசுகள் மாறினாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும் இந்த பிரச்சனை மட்டும் அந்த நாட்டில் தீராமல் தொடர்ந்து வருகிறது.

    மத மாற்ற பிரச்சனை

    மத மாற்ற பிரச்சனை

    பல வருடங்களுக்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் உருவாகி இருக்கிறது. இஸ்லாமிய மக்கள், அங்கு இருக்கும் புத்த மத மக்களை மதம் மாற்றுவதாக பிரச்சனை எழுந்தது. மேலும் புத்த விகாரங்களை சொந்தமான நிலங்களை அபாகரிப்பதாகவும், மசூதிகள் கட்டுவதாகவும் பிரச்சனை எழுந்து இருக்கிறது.

    புத்த மத தாக்குதல்

    புத்த மத தாக்குதல்

    இந்த நிலையில் புத்த மதத்தை சேர்ந்த சிலர் இஸ்லாமிய கட்டிட்டங்கள், மசூதிகள் மீது கடந்த 27ம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இதில் பலர் மோசமாக காயம் அடைந்தார்கள்.

    மரணம்

    மரணம்

    இந்த கலவரத்தில் இரண்டு பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பலர் காயம் காரணமாக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கலவரத்தை தொடங்கிய புத்த மத சிங்களர்கள்தான் என்று இஸ்லாமியர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

    மசூதிகள்

    மசூதிகள்

    இதில் மொத்தம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 75 கடைகள் கொளுத்தப்பட்டு இருக்கிறது. 32 வீடுகள் மோசமாக எரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 10 மசூதிகள் இடிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கிறது. இதையடுத்து கலவரம் பெரிதாகி இருக்கிறது.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமியர்கள் நேற்று கலவரம் செய்தார்கள். ஆனால் நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் போராட்டம் நிற்காத காரணத்தால் தற்போது 10 நாளாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடரும்

    தொடரும்

    அங்கு தற்போது ராணுவம் இரக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் போராட்டம் நடக்கிறது. இதில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகளை விடுதலை செய்ய சொல்லி சக துறவிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

    English summary
    Sri Lanka to declare a State Of Emergency for a period of 10 days after communal clashes “Gazette will be published today” says Minister S. B. Dissanayake.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X