For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐநா எச்சரிக்கையால் இரு மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்தது இலங்கை

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.

தமிழர்கள் வாழும் கிளிநொச்சி பகுதியில் மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோரை இலங்கை அரசு திடீரென பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கைது நடவடிக்கை உலகின் கவனத்தை ஈர்த்தது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.

ஆனால் இலங்கை அரசோ, இருவரும் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என அறிக்கை வெளியிட்டது. ஆனால் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியால் இந்த இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது இலங்கை அரசு.

English summary
Two human rights activists, Fr. Praveen Maheshan and Ruki Fernando, who were arrested by the Sri lanka's Terrorist Investigations Division (TID) on Sunday, have been released after they were produced before the Fort Magistrate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X