For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரமடையும் இன மோதல்கள்.. இலங்கையில் 10 நாட்களுக்கு எமெர்ஜென்சி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இனக்குழு மோதல் எதிரொலி...இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு எமெர்ஜென்சி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக முஸ்லீம் சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர்.

    Sri Lanka to declare a State Of Emergency for a period of 10 days

    இதில் காயமடைந்த சிங்கள இளைஞன் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெரும்பான்மை சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களை தாக்கி தீயிட்டு கொளுத்தினர்.

    சிங்கள முஸ்லீம் இனத்தவர்களுக்கு இடையிலான மோதலை அடுத்து கண்டியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இருப்பினும் வன்முறை கட்டுக்கடங்கவில்லை. நாட்டின் பிற பகுதிகளிலும் இன மோதல் பரவும் வாய்ப்புள்ளதால், இலங்கையில் நாடு முழுக்க 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அமைச்சர் திஸ்ஸநாயகே தெரிவித்தார். அரசிதழில் இந்த உத்தரவு இன்று வெளியிடப்பட உள்ளதாக அவர் கூறினார்.

    எனவே இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து கலவரத்தை தூண்டுமளவுக்கு செய்திகள் வெளியிடகூடாது என ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Sri Lanka to declare a State Of Emergency for a period of 10 days after communal clashes “Gazette will be published today” says Minister S. B. Dissanayake.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X